Categories: சினிமா

அவர்கள் ரெண்டு பேரும் வடிவேலுவை விட்டு விலகின பிறகுதான் அவர் காமெடி வொர்க் அவுட் ஆகலயா?

Spread the love

தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனதிலே படத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் வடிவேலு. இந்த படத்தில் இடம்பெற்ற போடா போடா புண்ணாக்கு என்ற பாடலின் சில வரிகளையும் பாடினார். இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் போன்ற இரு ஜாம்பவான்கள் இருந்த போதும் வடிவேலு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் விதமாக நடித்திருந்தார்.

இதையடுத்து சிங்காரவேலன் படத்தில் கமல்ஹாசனோடு நடிக்கும் போது அவரின் உடல்மொழி பிடித்துப் போய் கமல்ஹாசன் தேவர் மகன் படத்தில் வாய்ப்பளித்தார். தேவர் மகன் படம் வடிவேலுவுக்கு ஒரு நல்ல பிரேக்காக அமைந்தாலும், இயக்குனர் வி சேகரின் இயக்கத்தில் அவர் அடுத்தடுத்து நடித்த ‘வரவு எட்டணா செலவு பத்தனா’, காலம் மாறி போச்சு, நான் பெற்ற மகனே போன்ற படங்கள்தான் அவரை காமெடியில் உச்சம் தொட வைத்தன.

அதன் பிறகு கவுண்டமணி செந்திலும் மார்க்கெட்டும் டவுன் ஆக வடிவேலுவின் கொடி உயரப் பறந்தது. போட்டிக்கு விவேக் இருந்தாலும் அவரால் வடிவேலு அளவுக்கு உச்சம் தொட முடியவில்லை என்பதுதான் உண்மை. வடிவேலு சினிமாவில் எந்தளவுக்கு நகைச்சுவையாகத் தன்னைக் காட்டிக்கொள்வாரோ, அந்தளவுக்கு நிஜ வாழ்க்கையில் அவர் கோபக்காரராக இருந்துள்ளார் .

அதே போல ஷூட்டிங் ஸ்பாட்டில் பல பிரச்சனைகள் செய்து தயாரிப்பாளர்களின் பணத்தை வீணாக்குவதிலும் வடிவேலு வல்லவராக இருந்துள்ளார். அப்படி அவர் ஹீரோவாக நடித்து எக்கச்சக்கமாக நஷ்டமடைந்த படம்தான் இந்திரலோகத்தில் நா அழகப்பன். இம்சை அரசன் படத்துக்குப் பிறகு ரிலீஸான இந்த படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் காமெடி சுத்தமாக வொர்க் அவுட் ஆகாததால் படம் எடுபடவில்லை.

வடிவேலு இயக்குனர் சொல்லும் காட்சிகளை அப்படியே நடித்து செல்பவர் கிடையாது. தன்னுடைய குழுவினரைக் கொண்டு காமெடி காட்சிகளை மெருகேற்றி அதை தன் பாணியில் செய்பவர். அதுதான் அவரின் சக்ஸஸ் ஃபார்முலா என சொல்லப்படுகிறது. அப்படி அவர் குழுவில் இருந்தவர்கள்தான் தம்பி ராமையாவும் சிங்கமுத்துவும். அவர்கள் சொன்னால் வடிவேலு அதை மறுப்பேதும் சொல்லாமல் கேட்பார் என சொல்லப்பட்டது. ஆனால் வடிவேலுவை விட்டு எப்போது அவர்கள் பிரிந்தார்களோ அப்போதுதான் வடிவேலுவின் காமெடி அவுட்டேட் ஆனதாக ஒரு விமர்சனம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

7 minutes ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

13 minutes ago

திக்… திக்… வேறு சாதி இளைஞரைக் காதலித்த 21 வயது மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குஜராத்தில் அரங்கேறிய கொடூரம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் தாலுகாவின் மெட்பூர் கிராமத்தில், வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக 21…

26 minutes ago

இந்தா மச்சான்… ரசகுல்லா சாப்பிடு… நண்பன் பேச்சை நம்பி… வாயில் போட்ட நொடியில் வெடித்துச் சிதறிய வெடிகுண்டு… ம.பி – யில் அரங்கேறிய கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சாண்டா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேந்திர…

34 minutes ago

அடச்சீ… கோசம் கூட மனசாட்சி இல்லையா?… ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணைத் தள்ளிவிட்ட கொடூரன்… சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்… மும்பையில் பரபரப்பு…!!

மும்பை புறநகர் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 20 வயது இளம்பெண் ஒருவர், சக பயணியால் ரயிலில் இருந்து…

40 minutes ago

திக்… திக்… திக்… காவல் நிலையம் அருகே பயங்கரம்… 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை… பின்னணி என்ன?… உ . பி – யில் குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காவல் புறக்காவல் நிலையம் அருகே, மூன்று இளைஞர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 17…

46 minutes ago