Categories: CINEMA

கோலாகலமாக நடைபெற்ற ‘தளபதி 68’ பட பூஜை…! பிரசாந்த், பிரபு, சினேகா , லைலா என குவிந்த திரைபிரபலங்கள்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இத்திரைப்படத்தில் இதுவரை டபுள் ஆக்ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தளபதி 68 வேலைகள் தொடங்கபட்டது. அதன்படி விஜய், வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் சவுதர் கலிபோர்னியா இன்ஸ்டியூட்டா ஃபார் க்ரியேட்டிவ் டெக்னாலஜி சென்டருக்கு சென்று சென்னைக்கு திரும்பினர். இதைத்தொடர்ந்து இன்று தளபதி 68 திரைப்படத்தின் பூஜை சென்னையில் பிரசாந்த் ஸ்டூடியோவில் நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை பாடல் காட்சி ஒன்று எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், நடிகர் பிரபு தேவா , நடிகர் பிரசாந்த், நடிகை லைலா , நடிகை சினேகா, நடிகை மீனாட்சி சவுத்ரி மற்றும் படக்குழுவினர்கள் பலரும் பங்கேற்றுள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் லியோ திரைப்படத்தை போலவே இந்த திரைப்படத்திற்கும் படக்குழுவினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லியோ திரைப்படத்தை முன்னிட்டு  தளபதி 68 திரைப்படத்தின் பூஜை புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியிடப்படவில்லை. சமூக வலைதளத்தில் இனிமேல் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது நடிகர் வைபவ் தளபதி 68 படக்குழுவுக்கு வாழ்த்து கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

ஆம்ஸ்ட்ராங் உயிரிழப்பு.. தலை தலையாக அடித்துக் கொண்டு கதறி அழுத பா ரஞ்சித்.. வைரலாகும் வீடியோ..!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை அறிந்த பா ரஞ்சித் மருத்துவமனைக்கு வந்து கதறி அழுத…

24 நிமிடங்கள் ago

குணா படத்துல நிறைய குறைகள் இருக்கு… அதனால்தான் அந்த படம் ஓடல – பிரபல நடிகரிடம் ஓப்பனாக சொன்ன கமல்ஹாசன்!

தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் 90 களில் பல பரிசோதனை முயற்சி படங்களாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரின்…

1 மணி நேரம் ago

ஒரே கதைக்கு நான்கு இசையமைப்பாளர்கள்… எல்லா வெர்ஷனிலுமே சூப்பர்ஹிட் பாடல்கள்- இந்த படத்துக்கு இப்படி ஒரு சிறப்பு இருக்கா?

தென்னிந்திய சினிமாவில் மற்ற மொழிகளை விட மலையாள சினிமா எப்போதுமே ஒருபடி முன்செல்லக் கூடியதாக உள்ளது. அங்கு கமர்ஷியல் படங்களுக்கு…

2 மணி நேரங்கள் ago

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

11 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

11 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

12 மணி நேரங்கள் ago