#image_title
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை அறிந்த பா ரஞ்சித் மருத்துவமனைக்கு வந்து கதறி அழுத வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று இரவு 7:30 மணியளவில் தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தபோது அந்தப் பக்கம் இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம குழு அவரை அறிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
ஆம்ஸ்ட்ராங் மட்டுமல்லாமல் அவருடன் இருந்த மேலும் இருவர் மீதும் அரிவாள் வெட்டு விழுந்தது. ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த நிலையில் அங்கிருந்தவர்கள். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை கிரீன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்கள். மேலும் வெட்டுப்பட்ட இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் தப்பிச்சென்ற கொலையாளிகளை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை அறிந்த இயக்குனர் பா ரஞ்சித் கதறி அழுதபடி மருத்துவமனைக்கு ஓடி வந்தார். அங்கு வந்து பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளிடம் சம்பவத்தை குறித்து கேட்டறிந்தார். அவர் தலையில் அடித்தபடி கதறி அழுத வீடியோவானதே தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…