#image_title
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தளபதியாக நீங்காத இடத்தை பிடித்தவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் ‘தமிழக வெற்றி கழகம்’ என்னும் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். 2026 இல் நடைபெறும் தேர்தலில் அவர் போட்டியிடுவதாகவும், அறிவித்துள்ள விஷயம் தான் நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டு வந்தது.
அரசியலில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக சினிமாவிலிருந்தும் விலகப் போவதாக கூறியுள்ளார். தற்பொழுது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இவர் கமிட் செய்த திரைப்படத்தை முடித்துவிட்டு முழுமையான அரசியலில் ஈடுபட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று தமிழக முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. காலை 7:00 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். பிரபலங்கள் பலரும் தற்பொழுது வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .
நடிகர் விஜய் GOAT பட ஷூட்டிங் ரஷ்யாவில் நடைபெறுவதால் அங்கே இருந்து, தற்பொழுது சென்னைக்கு வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார். அந்த வகையில் வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை செலுத்தி இருக்கிறார் நடிகர் விஜய். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…
உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் இதயத் துடிப்பாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை, தற்போது அமெரிக்க - ஈரான் இடையிலான போர்…
பிரிட்டனின் வால்சால் பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள்ளேயே புகுந்து நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் தற்போது பர்மிங்காம்…
மும்பையில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாக பாஜகவினர் நடத்திய பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் கண்டு ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர்,…
தமிழக அரசியலில் நடிகர் விஜயன் 'தமிழக வெற்றிக் கழகம்' ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும், அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…