தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் இறுதி படமாக அறிவிக்கப்பட்டுள்ள தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பிரம்மாண்டமான பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து முதல் கட்ட படப்பிடிப்புக்காக பாடல் காட்சியின் படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்ட நடத்தப்பட்டது. அதில் விஜய் மற்றும் பூஜா ஹெட்டே இருவரின் காம்பினேஷன் காட்சிகளை எடுக்க இயக்குனர் வினோத் திட்டமிட்டு இருந்தார். தளபதியின் கடைசி படமாக உருவாகி வரும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் அனைத்து தரப்பினரையும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகின்றது. நடிகர் விஜயின் தளபதி 69 திரைப்படம் கடந்த மாத ஐந்தாம் தேதி பூஜை உடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியது. அதற்கு அடுத்த நாடு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் சூட்டிங் தொடங்கிய சூட்டிலேயே கல்லா கட்ட தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் வெளிநாட்டு உரிமை சுமார் 75 கோடி ரூபாய்களுக்கு கை மாறி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக விஜயின் திரைப்படங்களை வெளிநாடுகளில் வெளியிட்ட துபாயில் சேர்ந்த பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தளபதி 69 திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையையும் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் இந்த வெளிநாட்டு உரிமையை சில கண்டிஷன்களுடன் அந்த நிறுவனத்திற்கு ஒப்படைத்துள்ளது. இந்த தொகையை ஒரே செக்காக கொடுக்க வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டு உள்ளது. இதற்கு ஒப்பு கொண்ட அந்த நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முன்னணி நடிகர்களின் படமாக இருந்தாலும் எப்போதுமே ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி அல்லது பாதி படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு தான் அந்த படத்தின் வெளிநாட்டு, டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகள் விற்கப்படும்.

காலங்காலமாக இது நடைமுறையில் இருந்து வரும் நிலையில் விஜய் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். ஒவ்வொரு படத்திற்கும் 200 கோடிக்கு மேல் சம்பளம் பெற்று வருவதாக கூறப்படும் நிலையில் அவற்றை வேண்டாம் என்று சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் குதிப்பது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அதனைப் போலவே தற்போது அவருடைய தளபதி 69 திரைப்படத்தின் வசூலும் தொடங்கியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
