கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக லியோ, லியோ என தொடர்ந்து லியோ பற்றிய பேச்சு தான் அதிக அளவில் இருந்து வந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றிருக்கின்றது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா, சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட ஏராளமான பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். ஒரு சிலர் எதிர்மறையான விமர்சனங்களை கூறி வந்தாலும் படம் பெரும்பாலான ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது.
அதுமட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. ஒரு வழியாக லியோ முடிவுக்கு வந்த நிலையில் அடுத்ததாக தளபதி 68 திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த பூஜைக்கு இயக்குனர் வெங்கடேஷ் பிரபு இசையமைப்பாளர் யுவனை வைத்து ஒரு மியூசிக் கம்போஸ் செய்திருக்கிறாராம். இந்த வீடியோவானது இன்று இணையத்தில் வெளியாக இருக்கின்றது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…