இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ள படத்திற்கு தளபதி 68 எனது தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். முதலில் பாடல் காட்சிகளுடன் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. அந்த பாடலுக்கு விஜய், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடனம் ஆடியுள்ளனர். பிரபல டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தர் கோரியோகிராப் செய்துள்ளார். இந்த படத்தில் டபுள் ஆக்ஷனில் விஜய் நடிக்கிறார் என்பது ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்தது.
அவருக்கு சினேகாவும், மீனாட்சி சவுத்ரியும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தில் ஜெயராம், லைலா, பிரியங்கா மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர். இன்னும் சில நாட்களில் லியோ படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் தளபதி 68 படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளி வருகிறது. இந்நிலையில் தளபதி 68 படத்தில் வில்லன் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது வேறு யாருமில்லை மைக் மோகன் தான்.
1980-களில் வெள்ளி விழா நாயகன் என அழைக்கப்பட்டவர் மைக் மோகன். இவர் நடித்த திரைப்படங்கள் வெள்ளி விழா அல்லது 200 நாட்களுக்கு மேல் ஓடியது. இவர் பயணங்கள் முடிவதில்லை திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றார். இதனை தொடர்ந்து விதி, நூறாவது நாள், ரெட்டைவால் குருவி, சகாதேவன் மகாதேவன் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர் மோகன்.
80-களில் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த மோகன் தற்போது தளபதி 68 படத்தில் வில்லனாக மிரட்ட உள்ளார். ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த மோகன் வில்லனாகவும், தளபதி விஜய் ஹீரோவாகவும் இணைந்து நடிக்கும் காட்சிகள் திரையரங்குகளில் வெறித்தனமாக இருக்கும். பாடல் முடிந்து சண்டை காட்சிக்கான படப்பிடித்து நடந்து கொண்டிருக்கிறது. பிரபல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க உள்ள தளபதி 68 படம் விஜய் ரசிகர்களுக்கு அடுத்த விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…
குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…
அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…