தளபதி 69 படத்தில் விஜயின் கேரக்டர் இதுதானா?.. அப்போ வேற லெவல் தான்.. ரசிகர்களுக்கு குஷியான அப்டேட்..!

By Nanthini on அக்டோபர் 16, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவளுடைய நடிப்பில் இறுதியாக கோட் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் தான் இவருடைய சினிமா வாழ்க்கையில் கடைசி படம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார். இதனைத் தொடர்ந்து தளபதி 69 திரைப்படத்தின் பூஜை கடந்த வாரம் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கே நடைபெறும் என அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

   

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜயின் கேரக்டர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமாக ஒரு பாடல் காட்சியுடன் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது பாடல் காட்சியின் சூட்டின் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

   

 

இந்நிலையில் தளபதி 69 திரைப்படத்தில் விஜய் எக்ஸ் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. அரசியல் கலவையுடன் தளபதி 69 திரைப்படம் உருவாகி வரும் நிலையில் படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாகவே 50 வயதிற்கு மேற்பட்ட கதாபாத்திரங்களை விஜய் தேர்வு செய்து நடித்து வரும் நிலையில் தற்போது தளபதி 69 திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்து பிறகு சில காரணங்களால் அங்கிருந்து விலகிய நிலையில் மீண்டும் அவர் போலீசாக தனது வேலையை தொடங்கும் கதையை தான் இந்த திரைப்படம் கொண்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.