Simple-ஆக நடந்த தலைவர் 170 படத்தின் பூஜை.. Youngsters- க்கே டஃப் கொடுக்கும் தலைவரின் லுக்.. வைரலாகும் போட்டோஸ்..!!

By admin on ஐப்பசி 4, 2023

Spread the love

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் 600 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. அடுத்ததாக தலைவரின் 170-வது படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் தயாரிக்க உள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

   

தலைவர் 170 படத்தில் பகத் பாஸில், ராணா, அமிதாப்பச்சன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. தினமும் பட குழுவினர் புதிய புதிய அப்டேட்டுகளை வழங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

   

 

இந்நிலையில் தலைவர் 170 படத்தின் ரஜினி லுக் போஸ்டர் வெளியானது. அதனை பார்த்து ரசிகர்கள் தலைவருக்கு வயது குறைந்து கொண்டே போகிறது என கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக தலைவர் 170 படத்தின் பூஜையும் எளிமையாக நடந்து முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.