மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் கொண்டாட்டங்களை விட, சமூக வலைதளங்களில் ‘தாலா ஃபார் எ ரீசன்’ (Thala for a reason) என்ற மீம்ஸ்கள் தான் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மைதானத்தில் நேரில் அமர்ந்து போட்டியை ரசித்ததே இந்த மீம்ஸ் மழைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
தோனியின் அடையாளமான ‘7’ என்ற எண்ணுக்கும் இந்த வெற்றிக்கும் உள்ள விசித்திரமான தொடர்புகளை ரசிகர்கள் கண்டுபிடித்து கொண்டாடி வருகின்றனர். இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இரு அணிகளும் தலா 7 விக்கெட்டுகளை இழந்தது, திலக் வர்மா 7 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தது மற்றும் சஞ்சு சாம்சன் 7 சிக்ஸர்களை விளாசியது எனப் போட்டியின் ஒவ்வொரு புள்ளிவிவரத்தையும் தோனியின் ஜெர்சி எண்ணுடன் இணைத்து ரசிகர்கள் வேடிக்கையான மீம்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
கூகிள் இந்தியா (Google India) போன்ற அதிகாரப்பூர்வ கணக்குகளும் இந்த மீம்ஸ் கொண்டாட்டத்தில் இணைந்து “7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி… ஒரு காரணத்திற்காக” (Won by 7 runs… for a reason) எனப் பதிவிட்டுள்ளது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் சரியாக 7 ரன்களில் ஆட்டமிழந்ததையும் ரசிகர்கள் இதனுடன் ஒப்பிட்டுப் பகிர்ந்து வருகின்றனர். தோனி மைதானத்திற்கு வந்தாலே வெற்றி நிச்சயம் என்ற ரசிகர்களின் நம்பிக்கை மீண்டும் ஒருமுறை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள திட்டங்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் தினசரி சந்தையில் காளிராஜ் என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாகப்…
பொதுவாகப் பயிர்கள் செழித்து வளரும் விவசாய நிலங்களில் மனிதர்களின் கண் திருஷ்டி படாமல் இருப்பதற்காக சோளக்காட்டு பொம்மைகள், பழைய காலணிகள்…
சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் வைத்தீஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, காரில் மீண்டும் சென்னை நோக்கிப் புறப்பட்டனர். புதுச்சேரி…
மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் கைகாடா பகுதியில் இசை நிகழ்ச்சிக்குச் சென்ற 17 வயது சிறுமி…
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டம், கஞ்ச்பசோதா பகுதிக்குட்பட்ட 6-வது வார்டில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுவந்த 60 வயது முதியவர் ஒருவர்…
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணைக்கைதிகள் திடீரென தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.…