Categories: CINEMA

தல அஜித்தை சென்னை ஏர்போர்ட்டில் விரட்டி பிடித்த ரசிகர்கள்… திடீரென ஏற்பட்ட பரபரப்பு… வைரலாகும் வீடியோ…

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘துணிவு’. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

சமீபத்தில் நடிகர் அஜித் நார்வே நாட்டில் அவருடைய நண்பர்களுடன் இணைந்து பைக்கில் சுற்றிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகின. இந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நடிகர் அஜித் சென்னைக்கு வந்துள்ளார். இன்று அதிகாலை அஜித் சென்னை விமான நிலையம் வந்தபோது அங்கு அவரைக் காண காத்திருந்த ரசிகர்கள் சிலர் செல்பி எடுக்க சென்றனர்.

நின்றால் கூட்டம் கூடிவிடும் என்பதால் அஜித் அவர்களுக்கு போஸ் எதுவும் கொடுக்காமல் விறுவிறுவென நடந்து சென்றார். இருப்பினும் அவரை விடாத ரசிகர்கள் விரட்டி சென்று புகைப்படம் எடுக்க முயன்றனர். சில நிமிடங்களில் அங்கு ஏராளமான ரசிகர்கள் அஜித்தை சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

8 hours ago

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

10 hours ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

11 hours ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

11 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

11 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

13 hours ago