#image_title
ஆந்திரா முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது தொடர்ந்த அவதூறு பரப்பி வந்த ஸ்ரீ ரெட்டி மீது தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நிர்வாகி புகார் கொடுத்துள்ளார்.
தெலுங்கு சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்கள் மீதும் இயக்குனர்கள் மீதும் பாலியல் புகாரை வைத்து மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் தனக்கு பட வாய்ப்பு கொடுப்பதாக கூறி பலரும் ஏமாற்றி விட்டதாகவும், என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக குற்றச்சாட்டை வைத்திருந்தார்.
தெலுங்கு நடிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் நடிகர்களான ஸ்ரீகாந்த் , லாரன்ஸ் ஆகியோர் தொடங்கி இயக்குனர் முருகதாஸ் வரை பல பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை வைத்திருந்தார் ஸ்ரீ ரெட்டி. இந்த நடவடிக்கையால் ஆந்திராவில் நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்புகள் எதுவுமே கிடைக்காமல் போனது. அதனால் தற்போது சென்னையில் குடியேறி இருக்கின்றார். சென்னைக்கு வந்த இவர் தமிழ் சினிமா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.
தமிழில் பல நடிகர்களின் இயக்குனர்களின் பெயரையும் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வந்தார். அது மட்டும் இல்லாமல் தெலுங்கில் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து பல சர்ச்சையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றார். சமீபத்தில் பவன் கல்யாண்க்கு எதிராக பல விஷயங்களை பேசி இருந்தார். இதற்கு பவன் கல்யாண் ரசிகர்கள் பலரும் அவரை விமர்சித்து இருந்தார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த தேர்தலில் ஜெகன்மோகன் கட்சி தோல்வி அடைந்தால் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடை இல்லாமல் நடப்பேன் என்று அவர் கூறியிருந்தார் . ஆனால் இந்த தேர்தலில் ஜெகன்மோகன் கட்சி படுதோல்வி அடைந்தது. தெலுங்கு தேசம் கட்சிதான் பங்கு ஆட்சி அமைந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு துணை முதல்வர் பவன் கல்யாண் உள்துறை அமைச்சர் அனிதா ஆகியோர் பதவி ஏற்றது குறித்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு இருந்தார் ஸ்ரீ ரெட்டி. இந்நிலையில் கர்னூலைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி நாகராஜு தெலுங்கு தேச கட்சியின் தலைவர் மீது ஸ்ரீ ரெட்டி அவதூறு பரப்புவதாக கூறி கடந்த ஜூலை 20ஆம் தேதி புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இவர் கைது செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகி வருகின்றது.
ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…
கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…
குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…
ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…
திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசாபுரா பகுதியில், அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று மோட்டார் சைக்கிள்…