தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொள்வதும் விவாகரத்து செய்து பிரிவதும் என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில் கூட நடிகை ரம்யா பாண்டியன் திருமணம் நடைபெற பிறகு இட்லி கடை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணமும் நடைபெற்றது. இவர்களைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
இப்படியான நிலையில் தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகர்களில் ஒருவராக இருக்கக்கூடிய நடிகர் பென்மேட்சா சுப்பாராஜு தற்போது திருமணம் செய்து கொண்டு பேச்சிலர் வாழ்க்கைக்கு எண்டு கார்டு போட்டுள்ளார். தெலுங்கில் பிரபலமான நடிகரான இவர் தமிழில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, போக்கிரி, சரவணா, ஆயுதம், ஆதி மற்றும் பாகுபலி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
தற்போது 47 வயதாகும் இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் பேச்சிலர் வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பேச்சுலர் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து குடும்ப வாழ்க்கைக்கு ஆரம்ப புள்ளி வைத்துள்ளார். அவர் தன்னுடைய மனைவியுடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் தாலுகாவின் மெட்பூர் கிராமத்தில், வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக 21…
மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சாண்டா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேந்திர…
மும்பை புறநகர் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 20 வயது இளம்பெண் ஒருவர், சக பயணியால் ரயிலில் இருந்து…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காவல் புறக்காவல் நிலையம் அருகே, மூன்று இளைஞர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 17…
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்…