யார் சாமி நீ… மூட்டையைத் திறந்ததும் காத்திருந்த மெகா ஷாக்… 11,000 நாணயங்களைக் கொட்டி பைக் வாங்கிய தெலுங்கானா நபர்…!!

Spread the love

தெலுங்கானாவில் ஒரு நபர் ரூ 10 நாணயங்களை மட்டுமே கொண்டு ரூ1.10 லட்சம் மதிப்புள்ள புதிய இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ள விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி-புவனகிரி மாவட்டத்தின் வெலிமினேடு கிராமத்தைச் சேர்ந்த கொண்டெ ரகுபதி என்ற இளைஞரே இந்த வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

ரகுபதி சிட்யாலா பகுதியில் உள்ள ஒரு இருசக்கர வாகன ஷோரூமிற்குச் சென்று தனக்குப் பிடித்த ‘ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கைத் தேர்வு செய்துள்ளார். பின்னர் அதற்கான முழுத் தொகையான ரூ 1.10 லட்சத்தையும், தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச் சேமித்து மூட்டைகளில் கொண்டு வந்திருந்த 11,000 பத்து ரூபாய் நாணயங்களாகச் செலுத்தி அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சந்தையில் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று பரவி வரும் வதந்திகளைப் போக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவுமே அவர் இந்த முறையைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஷோரூம் ஊழியர்கள் பல மணி நேரம் பொறுமையுடன் அந்த நாணயங்களை எண்ணிச் சரிபார்த்த பின்பு, அவரிடம் பைக்கின் சாவியை ஒப்படைத்தனர். கவுண்டர் மற்றும் தரை முழுவதும் நாணயங்கள் குவிந்து கிடக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Swetha

Recent Posts

இரவோடு இரவாக மாறிய அதிகாரிகள்…. தமிழக நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம்…. வெளியான திடீர் அறிவிப்பு….!

தமிழக நிர்வாக நலன் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தும் நோக்கில், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உட்பட முக்கிய…

3 seconds ago

அன்பில் மகேஸ் கைதால் வெடித்த சர்ச்சை…. திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு கோர்ட் கொடுத்த ரிலீஃப்…. நள்ளிரவில் அதிரடி திருப்பம்….!

சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு சென்னை அம்பத்தூர்…

5 minutes ago

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

8 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

8 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

8 மணத்தியாலங்கள் ago