இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறை சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தற்கொலை முடிவுகளை நாடுகின்றனர். படிக்கும் இடத்திலும் சரி வீட்டிலும் சரி எது நடந்தாலும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவை தான் நாடுகிறார்கள். நாளுக்கு நாள் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தெலுங்கானாவில் தற்போது நடந்துள்ளது. தெலுங்கானாவில் கல்லூரி மாணவி ஒருவர் விடுதி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவர் எழுதிய தற்கொலை கடிதமும் போலீஸ் விசாரணையில் சிக்கி உள்ளது. அந்த கடிதத்தில், அம்மா நான் எந்த தவறும் செய்யவில்லை, என் இறப்புக்குப் பிறகு என்னை குறை சொல்பவர்களை வெறுக்க வேண்டாம், உங்கள் அன்பை மறந்து விடாதீர்கள் என்று உருக்கமாக எழுதியுள்ளார். தற்போது இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெறும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது
காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கிற்கு எதிராக, தமிழக அரசு…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட 'ஆக்ரா சௌபட்டி' என்ற இடத்தில், பொழுதுபோக்கிற்கான ஜிப்-லைனிங் (Zip-lining)…
திமுகவில் மீண்டும் 'செயல் தலைவர்' பதவி கொண்டு வரப்படவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை…
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை…
தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, சட்டப்பேரவையில் விஜய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஆற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்…