தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்குப் பள்ளிக்கல்வித்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்து அதிரடி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் யாரும் பணி நேரத்தில் பள்ளிக்கூட வளாகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதிய உணவு இடைவேளை நேரத்திலும் ஆசிரியர்கள் வெளியே செல்லக் கூடாது என்றும், பள்ளி நேரத்தில் ஏதேனும் அசாதாரண நிகழ்வுகள் அல்லது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் உடனடியாக உயர் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த அதிரடி உத்தரவு ஆசிரியர் அமைப்புகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…