காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள தேவரியம்பாக்கம் பகுதியில், அரசுப் பேருந்து மீது பின்னால் வந்த டாரஸ் லாரி மோதியதில் 10 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரணவாசி பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டிய இரு வடமாநிலத் தொழிலாளர்கள், பேருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் தாண்டிச் சென்ற பிறகு ஓட்டுநரிடம் வண்டியை நிறுத்துமாறு கூறியுள்ளனர். இதனால் ஓட்டுநர் திடீரெனத் தடை போட்டுப் பேருந்தை நிறுத்தியுள்ளார்.
அப்போது பின்னால் வந்த பாரவூர்தி எதிர்பாராதவிதமாகப் பேருந்தின் பின்புறம் பலமாக மோதியது. இந்த கொடூர விபத்தில் பேருந்திலிருந்த 10 க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்து இரத்தக்களறியாகினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநில நர்சிங் கவுன்சிலின் இணையவழி பதிவு முறையில் நிலவும் பாதுகாப்பின்மையை அம்பலப்படுத்தும் விதமாக, என்எஸ்யுஐ மாணவர் அமைப்பின்…
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தபோது…
தவெக - பாமக கூட்டணி குறித்த தகவல்கள் வதந்தியே என்றும், விசிகவின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரே இத்தகைய…
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல்…
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான, அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள சுமார் 7,515 சதுர அடி பரப்பளவிலான…
மதுராந்தகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யையும் அவரது ஆட்சியையும்…