தமிழகத்தில் ஜனவரி 16-ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு, டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தினங்களிலும் மது விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த உத்தரவு டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி, தனியார் விடுதிகள் மற்றும் கிளப்புகளில் உள்ள மதுக்கூடங்களுக்கும் பொருந்தும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
