சென்னை கோட்ட ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளப் பகுதிகள் அருகே சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அங்குள்ள 52 டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என ரயில்வே பாதுகாப்பு படை (RPF) தமிழக அரசுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளது. ரயில் நிலையங்களின் மிக அருகாமையில் அமைந்துள்ள இம்மதுக்கடைகளால் இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், மதுப்பிரியர்களின் அத்துமீறல்களால் ரயிலில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் பெண் பயணிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலும், இடையூறுகளும் ஏற்படுவதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை அனுப்பியுள்ள பட்டியலில், பெரம்பூர், அரக்கோணம், கொருக்குப்பேட்டை ஆகிய முக்கிய ரயில் நிலையப் பகுதிகளில் தலா 2 முதல் 3 டாஸ்மாக் கடைகளும், வியாசர்பாடி, வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பல்வேறு புறநகர் ரயில் நிலையங்களின் அருகே தலா ஒரு கடையும் செயல்பட்டு வருவது குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில் நிலைய வளாகங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொது இடங்களின் அமைதியைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த 52 மதுக்கடைகளையும் பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் மிக விரைவாக மூடி, இடமாற்றம் செய்ய வேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…