23 வருட வரலாற்றில் அதிரடி மாற்றம்…. TASMAC-ஐ தனியாருக்கு தூக்கிக் கொடுக்கிறாரா CM விஜய்?…. அமைச்சர் உடைத்த உண்மை… மதுப்பிரியர்களுக்கு ஷாக்….!

Spread the love

தமிழக அரசுக்கு மிகப்பாரிய வருவாயை ஈட்டித் தரும் டாஸ்மாக் மது விற்பனையை, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. கடந்த 2003 ஆம் ஆண்டு வரை தனியாரிடம் இருந்த சில்லறை மது விற்பனையை, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அரசு நேரடியாக ஏற்று நடத்தும் என அறிவித்தார். அதன்படி கடந்த 23 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனமே நேரடியாக சில்லறை விற்பனையை மேற்கொண்டு வரும் சூழலில், மீண்டும் இத்துறையை தனியார் மயமாக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் உலாவின.

முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் உள்ள கடைகள் மற்றும் பார்கள் உட்பட சுமார் 2,500 டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து தமிழக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்துள்ளார். கோவை பொள்ளாச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த ஆட்சியால் மதுவிலக்குத் துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது; அதைச் சீரமைக்க பல கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் டாஸ்மாக் நிர்வாகத்தைத் தனியார் மயமாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதே தவிர, இன்னும் எந்தவொரு உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகள் மற்றும் கனிம வள கடத்தல் குறித்தும் அமைச்சர் பேசினார். “ஆதாரம் இல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை யார் மீதும் வழக்குப்பதிவு செய்யாது; இதுபோன்ற விவகாரங்களில் கருத்துச் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மக்களின் வளர்ச்சி மற்றும் ஆக்கப்பூர்வமான கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க விரும்புகிறேன். மேலும், தமிழகத்தின் இயற்கை செல்வங்களைப் பாதுகாக்க, அண்டை மாநிலங்களுக்குக் கனிம வளங்களை எடுத்துச் செல்ல மூன்று மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம் குறித்து விவாதிக்கப்பட்டது உண்மைதான் என்பதை அமைச்சரின் கூற்று உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது சட்டப்பேரவை கூட்டத்தொடரிலான சட்டத்திருத்தம் விரைவில் வெளியாகக்கூடும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தமிழகத்தில் பல தசாப்தங்களாக இருந்து வரும் அரசு மது விற்பனை முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

“ஸ்டாலின் போட்ட ஒரே கணக்கு”…. கொத்தாக தூக்கப்பட்ட தவெக பட்டாளம்…. கே.என்.நேருவின் ஆட்டோகிராஃப் மேடை…!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக தேர்தல் களம்…

5 minutes ago

“ஐயோ வலிக்குது…” இளம்பெண்ணுக்கு உயிரோடு தீ வைத்த வாலிபர்… ஹாஸ்பிடலுக்குள் நுழைந்து அரங்கேறிய பயங்கரம்…. திக் திக் வீடியோ வைரல்…!!

தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினிப் பிரிவில் பணியாற்றி வந்த 35 வயது பெண் ஊழியர்…

10 minutes ago

ரூ.5 லட்சத்தை சுருட்டி விட்டு ரூ.27 லட்சம் மிரட்டல்… பிக்பாஸ் வர்ஷினி அதிரடி கைது…. ஹோட்டல் ரூமில் நடந்த விபரீதம்….!

குறும்படத்தில் நடிப்பதற்காக ரூ.5 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதுடன், அதைத் திரும்பக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்த புகாரில் பிக்பாஸ்…

15 minutes ago

“கடைசி போன் கால்…” கான்ஸ்டபிள் சொன்னதை கேட்டு கதறிய நிச்சயதார்த்த பெண்…. அந்த காட்சியை கண்டு பதறிய போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஹைதராபாத் நகரின் மலாக்பேட் பகுதிக்கு உட்பட்ட சாலிவாகன நகரில் வசித்து வந்த 35 வயதான போலிஸ் காவலர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை…

24 minutes ago

“விவசாயியை சுருட்டி வளைத்த ராட்சத மலைப்பாம்பு….” கழுத்தையும், கைகளையும் இறுக்கி உயிரை குடிக்க முயன்ற கொடூரம்… நடுங்க வைக்கும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள விளைநிலம் ஒன்றில், உள்ளூர்வாசியான இளைஞர் ஒருவர் தனது கால்நடைகளுக்காகப் புல்…

47 minutes ago