சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் டிஆர்பி லிஸ்ட் வெளியிடப்பட்டு வருகிறது. எப்போதுமே சன் டிவி சீரியல்கள் முதல் மூன்று இடங்களை ஆக்கிரமித்து வரும் நிலையில் அடுத்தடுத்த இடங்களை விஜய் டிவி சீரியல்களும் ஒரு சில நேரங்களில் ஜீ தமிழ் சீரியல்களும் பிடித்து விடுகின்றன. கடந்த வாரம் டாப் 5 லிஸ்டில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் இடம் பெற்றிருந்தது. இந்த வாரம் எப்பவும்போல சன் டிவி சீரியல்கள் முதல் இடத்தை ஆக்கிரமித்துள்ளன. இந்த வருடத்தின் 18 வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்கள் லிஸ்ட் வெளியாகி உள்ளது.
1.சிங்க பெண்ணே:
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் இந்த முறை 8.72 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது. ஒவ்வொரு வாரமும் சிங்கப்பெண்ணே சீரியல் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்து வருகிறது.
2. மூன்று முடிச்சு:
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் 8.23 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்திருக்கிறது.
3. கயல் சீரியல்:
பரபரப்பான திருப்பங்களுடன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரம் 8.12 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்திருக்கிறது.
4.மருமகள்:
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் 7.31 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரம் பின்னுக்கு தள்ளப்பட்ட இந்த சீரியல் இந்த வாரம் டாப் 5லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.
5. சிறகடிக்க ஆசை:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 7.22 புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்தை பிடித்திருக்கிறது. சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரத்தில் நான்காவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் ஐந்தாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
6.எதிர்நீச்சல் தொடர்கிறது:
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கடந்த வாரத்தில் இந்த சீரியல் 6.96 புள்ளிகளை பெற்று 6வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
7.அய்யனார் துணை:
விஜய் டிவியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் கடந்த வாரத்தில் 6.81 புள்ளிகளை பெற்று 7வது இடத்தை பிடித்திருக்கிறது.
8.அன்னம்:
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியல் 6.76 புள்ளிகளைப் பெற்று 8-வது இடத்தை பிடித்திருக்கிறது.
9.பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த வாரத்தில் 6.67 புள்ளிகளை பெற்று 9வது இடத்தை பிடித்திருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த வாரத்தில் ஆறாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது.
10. கார்த்திகை தீபம்:
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் இந்த வாரத்தில் 5.78 புள்ளிகளை பெற்று 10வது இடத்தை பிடித்திருக்கிறது.
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…