பொதுவாக சன் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் தனி வரவேற்பு உண்டு. ஏனென்றால் அந்த காலத்தில் இருந்து தற்போது வரை மக்களுக்கு எந்த மாதிரியான கதைக்களத்தை கொடுத்தால் மக்கள் விரும்பி பார்ப்பார்கள் என்றதற்கு ஏற்றது போல சன் டிவியில் உள்ள சீரியல்கள் அனைத்தும் வந்து கொண்டிருக்கிறது. அதனால் சன் டிவியில் சுமார் 19 சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற சேனல்களும் சீரியல்களை ஒளிபரப்பாகி வரும் நிலையில் டி ஆர் பி யில் போட்டி போட்டு வருகின்றன. அதன்படி இந்த வாரம் டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்கள் லிஸ்ட் வெளியாகி உள்ளது. இதில் வழக்கம் போல சன் டிவி சீரியல்களை முதலிடத்தை தக்க வைத்துள்ளன.
சிங்க பெண்ணே:
சன் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பு செய்யப்பட்ட சிங்கப் பெண்ணே சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் 9.42 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.
மூன்று முடிச்சு:
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் மக்களின் பேராதரவுடன் 9.10 புள்ளிகளை பெற்று டிஆர்பி யில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
கயல்:
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரமும் டிஆர்பி-யில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வாரம் ஒன்பது புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மருமகள்:
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் இந்த வாரம் 8.05 புள்ளிகளை பெற்ற டிஆர்பி யில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
சின்ன மருமகள்:
டாப் 10 லிஸ்டில் கூட வராத சின்ன மருமகள் சீரியல் இந்த வாரம் அதிரடியாக 7.81 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
அன்னம்;
சன் டிவியில் தற்போது புதிதாக தொடங்கப்பட்டு சமீப காலமாக ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியல் மக்களின் பேராதரவை பெற்று 9.01 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
சிறகடிக்க ஆசை:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் சற்று பின்னுக்கு தள்ளப்பட்டு 6.90 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 6.88 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தை தக்க வைத்துள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது:
கடந்த முறை டிஆர்பி ரேட்டில் தொடர்ந்து முன்னிலையில் இருந்த எதிர் நீச்சல் சீரியல் மீண்டும் ஒளிபரப்பை தொடங்கியதில் இருந்து டாப் 5 இடத்தை பிடிப்பதற்கு போராடிவரும் நிலையில் இந்த வாரம் 6.80 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தை பிடித்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
விஜய் டிவியில் குடும்ப கதையாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் இரண்டாவது பாகம் இந்த முறை 6.4 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.
துருக்கியின் புர்சா பகுதியில் 45 வயதான ஷாஹின் டி என்ற பயிற்சியாளர், ஆபத்தில் இருந்த ஒரு பூனைக்குட்டியைக் காப்பாற்ற முயன்றுள்ளார்.…
டெக்னஸிலுள்ள பெல்மா பென்னி தொடக்கப் பள்ளியில் கடந்த 2026 ஏப்ரல் 15 அன்று, எட்டு வயது சிறுமி ஏட்ரியன் தாம்சன்…
பாலேவாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், வெள்ளிக்கிழமை மதியம் வகுப்பறைக்கு வெளியே மற்றொரு…
மீரட் நீல டிரம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முஸ்கான் மற்றும் அவரது காதலன் சஹில், அந்தத் தீர்ப்பை…
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…