தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி தனியார் பள்ளிகளில் கண்டிப்பாக காலை வணக்க கூட்டம் நடத்த வேண்டும் என்றும் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நாட்டு பண்ணை மாணவர்களே பாட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் பாடல்களை ஒளிபரப்ப கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை என்பதால் டிசம்பர் 22 திங்கட்கிழமை முதல் இது நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், மாணவர்களை உடல் ரீதியாகவோ அல்லது உளவியல் ரீதியாகவோ (Physical or Psychological Harassment) எந்த வகையிலும் துன்புறுத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பள்ளிப் பேருந்துகளில் மாணவர்கள் உரிய பாதுகாப்புடன் வந்து செல்வதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி அங்கும் இங்குமாக ஓடாமல், உதவியாளர் துணையுடன் வகுப்பறைக்கு வருவதற்கு ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேராடூனில் இராணுவ வீரர் ஒருவரின் மகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 32 வயதான ராகுல் கந்துரி என்ற ஆசிரியருடன் திருமணம்…
வெள்ளத்தின் கொடூரப் பிடியில் சிக்கித் தன் தாயை இழந்துவிட்டோம் என்ற உண்மை கூடத் தெரியாமல், யாரோ ஒருவரால் இழுத்துச் செல்லப்படும்…
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் ஆபாசப் பதிவுகளைப் பரப்புபவர்கள்…
உலகின் மிகச்சிறந்த மற்றும் மர்மமான தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படும் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா, சிறுவயதிலேயே பார்வையை இழந்தவர்.…
புகழ்பெற்ற கர்நாடக இசை வீணை கலைஞரான வீணா காயத்ரி, சென்னை மந்தைவெளியில் உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று உணவு…
தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கட்சியின் மூத்த தலைவர்களான டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் திருச்சி…