தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக பொங்கல் பண்டிகையின் போது ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2025 ஆண்டை நிதி பற்றாக்குறை காரணமாக பொங்கல் பரிசில் ரொக்க பணம் வழங்கப்படவில்லை. இதனிடையே 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு ரொக்க பணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்பட்ட இரண்டாவது வாரத்தில் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே 2021 தேர்தலின் போது அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கியது. இதனை முறியடிக்கும் வகையில் 3000 ரூபாய் வழங்க தற்போது திமுக அரசு திட்டமிட்டு அதில் உறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. என் நிலையில் பொங்கல் பரிசு தொகை பற்றி புத்தாண்டு தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் எனவும் தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் டோக்கன் வினியோகம் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…