கோலாகலமாக நடைபெற்று முடிந்த ‘தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் விழா’… விருது பெற்ற முக்கிய பிரபலங்கள்… வைரலாகும் போட்டோஸ்…

By Begam

Published on:

திரைப்படக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் விழா நேற்று சென்னையில் நடைபெற்று முடிந்தது.  2015ம் ஆண்டுக்கான தேர்வு செய்யப்பட்ட சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விருது விழாவில் திரைப்பட விருதுகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி கெளரவித்தார். பல முன்னணி பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

   

மொத்தம் 39 பேருக்கு காசோலை, தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதன்படி சிறந்த படத்திற்கான முதல் பரிசு ‘ தனி ஒருவன்’ திரைப்படத்திற்கும்,

2ம் பரிசு ‘ பசங்க 2’ திரைப்படத்திற்கும், 3ம் பரிசு ‘பிரபா’ திரைப்படத்திற்கும், சிறப்புப் பரிசு ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்திற்கும், பெண்களை பற்றி உயர்வாக சித்திரிக்கும் படம் என்ற பிரிவில் சிறப்புப் பரிசு ‘ 36 வயதினிலே’ திரைப்படத்திற்கும் வழங்கப்பட்டது.

மேலும் சிறந்த நடிகையாக, ரித்திகா சிங் ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்திற்காக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த வில்லன் நடிகராக , அரவிந்த்சாமி ‘தனி ஒருவன்’ திரைப்படத்திற்காக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகர் பிரிவில் நடிகர் மாதவன் ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்திற்காக தேர்வு செய்யப்பட்டார்.

சிறந்த நடிகை பிரிவில் நடிகை  ஜோதிகா ’36 வயதினிலே’ திரைப்படத்திற்காகவும், சிறந்த இயக்குநர் பிரிவில் இயக்குனர் சுதா கொங்கரா ‘இறுதிச்சுற்று திரைப்படத்திற்காக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் சிறந்த கதையாசிரியர் பிரிவில், மோகன் ராஜா அவர்கள் ‘தனி ஒருவன்’ படத்திற்காகவும், சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் , ஜிப்ரான் அவர்கள் ‘உத்தம வில்லன், பாபநாசம்’ திரைப்படங்களுக்காவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிறந்த ஒளிப்பதிவாளராக, ராம்ஜி ‘தனி ஒருவன்’ திரைப்படத்திற்காகவும் ,சிறந்த நகைச்சுவை நடிகராக ,  சிங்கம்புலி ‘அஞ்சுக்கு ஒண்ணு’ திரைப்படத்திற்காகவும் , சிறந்த நகைச்சுவை நடிகையாக, தேவதர்ஷினி ‘திருட்டுக் கல்யாணம்,  36 வயதினிலே’ திரைப்படங்களுக்காகவும் ,

சிறந்த குணச்சித்திர நடிகராக, தலைவாசல் விஜய் ‘அபூர்வ மகான்’ திரைப்படத்திற்காகவும்,  சிறந்த குணச்சித்திர நடிகையாக ,  கவுதமி ‘பாபநாசம்’ திரைப்படத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதுமட்டுமின்றி சிறந்த உரையாடலாசிரியர், சிறந்த பாடலாசிரியர் , சிறந்த பின்னணிப் பாடகர், சிறந்த பின்னணிப் பாடகி,  சிறந்த ஒலிப்பதிவாளர், சிறந்த திரைப்பட தொகுப்பாளர், சிறந்த கலை இயக்குநர், சிறந்த சண்டை பயிற்சியாளர், சிறந்த நடன ஆசிரியர், சிறந்த ஒப்பனை கலைஞர், சிறந்த தையற் கலைஞர் , சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த பின்னணிக்குரல் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழக்கங்கப்பட்டு திரைக்கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர். இவ்விழா தொடர்பான புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாக ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை அவர்களுக்கு கூறி வருகின்றனர்.