2026-ல் தமிழகத்தை ஆளப்போவது யார்?…. ஆட்சியைத் தீர்மானிக்கப் போகும் 15% வாக்குகள்…. புதிய கருத்துக்கணிப்பு வெளியானது….!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டைம்ஸ் நவ் (Times Now) வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பு மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கணிப்பின்படி, தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவை முந்தி, அதிமுக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதிமுக கூட்டணி 40% வாக்கு வங்கியுடன் 114 முதல் 127 இடங்கள் வரை வெற்றி பெறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், திமுக கூட்டணி 38% வாக்குகளுடன் 104 முதல் 114 இடங்கள் வரை பெற்று, மிகக் குறுகிய இடைவெளியில் ஆட்சியை இழக்க நேரிடும் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்தத் தேர்தலில் மற்றுமொரு முக்கிய அம்சமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. முதன்முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் டிவி கே, 15% வாக்குகள் பெற்று 6 முதல் 12 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை உணர்த்துகிறது. மேலும், இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 12% வாக்குகளுடன் 1 முதல் 6 இடங்கள் வரை பெறக்கூடும் என டைம்ஸ் நவ் கணித்துள்ளது. இந்த மும்முனைப் போட்டியால் தமிழக தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Nanthini

Recent Posts

டேய் நிறுத்துடா… கண் எதிரே பறந்த கட்டுப்பாடற்ற கார் கொடுத்த… மரண பீதியில் உறைந்த பொதுமக்கள்… ஜெய்ப்பூரில் பரபரப்பு…!

ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் செப்டம்பர் 2 அன்று அதிவேகமாக வந்த கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பல வாகனங்கள் மீது…

20 minutes ago

ஐயோ… லாரி மோதி பள்ளி மாணவிகள் இரண்டு சகோதரிகள்… சம்பவ இடத்திலேயே பலி… ஹரியானாவில் நேர்ந்த சோகம்…!

ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் நேற்று காலை நேர்ந்த கோர சாலை விபத்தில், பள்ளிக் கல்வி பயின்று வந்த இரண்டு…

40 minutes ago

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

9 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

9 மணத்தியாலங்கள் ago