நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘ஜெமினி’ இப்படத்திற்கு முதலில் ‘ஏறுமுகம்’ என்று பெயரிட்டனர். அதன் பிறகு ‘ஜெமினி’ என்று மாற்றப்பட்டது.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘பொல்லாதவன்’ இப்படாகத்திற்கு முதலில் ‘இரும்பு குதிரை’ என்று பெயரிட்டனர் .அதன் பிறகு ‘பொல்லாதவன்’ என்று மாற்றப்பட்டது.

நடிகர் சூர்யா மற்றும் அசின் நடிப்பில் வெளியான படம் ‘கஜினி’. இப்படத்திற்கு முதலில் ‘மிரட்டல்’ என்று பெயரிட்டனர். அதன் பிறகு கஜினி என்று மாற்றப்பட்டது.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‘உனக்கும் எனக்கும்’. இப்படத்திற்கு முதலில் ‘சம்திங் சம்திங்’ என்று பெயரிட்டனர். அதன் பிறகு ‘உனக்கும் எனக்கும்’ என்று மாற்றப்பட்டது.

நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான படம்’ விருமாண்டி’ இப்படத்திற்கு முதலில் ‘சண்டியர்’ என்று பெயரிட்டனர். அதன் பிறகு’ விருமாண்டி’ என்று மாற்றப்பட்டது.

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான படம் ‘அச்சம் என்பது மடமையடா’ இப்படத்திற்கு முதலில் ‘சட்டென்று மாறுது வானிலை’ என்று பெயரிட்டனர். அதன் பிறகு ‘அச்சம் என்பது மடமையடா’ என்று மாற்றப்பட்டது.

நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான படம்’ 16 வயதினிலே’ இப்படத்திற்கு முதலில்’ மயில்’ என்று பெயரிட்டனர். அதன் பிறகு 16 வயதினிலே என்று மாற்றப்பட்டது.

நடிகர் சந்தானம் விமல் போன்ற நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் ‘கலகலப்பு’ திரைப்படத்திற்கு முதலில் ‘மசாலா காப்பே’ என்று பெயரிட்டனர். அதன் பிறகு ‘கலகலப்பு’ என்றுமாற்றப்பட்டது.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘புதுப்பேட்டை’ இப்படத்திற்கு முதலில் ‘காசிமேடு’ என்று பெயரிட்டனர். அதன் பிறகு ‘புதுப்பேட்டை’ என்று மாற்றப்பட்டது.

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான’ காக்க காக்க’ இப்படத்திற்கு முதலில் ‘முன்குறிப்பு’ என்று பெயரிட்டனர். அதன் பிறகு ‘காக்க காக்க’ என்று மாற்றப்பட்டது.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘வரலாறு’ இப்படத்திற்கு முதலில் ‘காட் பாதர்’ என்று பெயரிட்டனர். அதன் பிறகு ‘வரலாறு’ என்று மாற்றப்பட்டது.

நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான படம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ இப்படத்திற்கு முதலில் ‘குடை’ என்று பெயரிட்டனர். அதன் பிறகு கணத்தில் முத்தமிட்டால் என்று மாற்றப்பட்டது.

நடிகர் கமலஹாசன் மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான’ தேவர்மகன்’ இப்படத்திற்கு முதலில் ‘நம்மவர்’ என்று பெயரிட்டனர். அதன் பிறகு ‘தேவர்மகன்’ மாற்றப்பட்டது.

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’ இப்படத்திற்கு முதலில் ‘ரோபோ’ என்று பெயரிட்டனர். அதன் பிறகு எந்திரன் என்று மாற்றப்பட்டது.

