தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு என்று ஒரு whatsapp குரூப் இருக்கிறது. இதே போல சில தயாரிப்பாளர்கள் தனியாக whatsapp குரூப் தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் பற்றியும், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையாக அந்த தனிப்பட்ட குரூப்களில் விமர்சித்து வருகின்றனர்.
அதில் உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்கள் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், சங்கத்தின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி தங்கத்தின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், நிரந்தர உறுப்பினர்கள் பற்றி சோசியல் மீடியாவில் ஆதாரம் இன்றி அவதூறு பரப்புகிறார்கள்.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற அவதூறு கருத்துக்களை whatsapp அட்மின்கள் உடனடியாக நீக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவதூறு பரப்பும் உறுப்பினர்களோடு மற்ற உறுப்பினர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி தரப்பினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ₹5,000 வழங்கி வருவதாக பாஜக தேசிய…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மிகக் கடுமையான பதிலடி…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அதிமுகவின் எதிர்காலத்தையும் எடப்பாடி பழனிசாமியின் (EPS) அரசியல் வாழ்வையும் தீர்மானிக்கும் ஒரு 'வாழ்வா…
நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம், கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பெரும்…
நடிகர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' இணையதளத்தில் கசிந்த விவகாரம், தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்.வினோத்…
திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தல் களம் தற்போது தனிநபர் புகார் ஒன்றால் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின்…