#image_title
தமிழ் சினிமாவில் பல திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள். வடிவேலு விவேக் நாகேஷ் போன்ற பல மக்களின் மனதை கவர்ந்த நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் தங்களது தனித்துவமான நகைச்சுவை மற்றும் முகபாவனைகள் மூலம் தமிழ் சினிமாவில் இடம் பிடித்த நகைச்சுவை நடிகைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா? அப்படிப்பட்ட ஐந்து நடிகைகளை பற்றி இனி காண்போம்.
1. டி ஏ மதுரம்
தமிழ் சினிமா தொடங்கிய காலத்திலேயே நகைச்சுவை நடிகையாக புகழ்பெற்றவர் டி ஏ மதுரம். இவரது கணவர் NS கிருஷ்ணன் பல படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 1935 ஆம் ஆண்டு ரத்னாவளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மதுரம் பிறகு கிட்டத்தட்ட 26 படங்களில் 1952 வரை நடித்திருக்கிறார். பகுத்தறிவு கருத்துக்களை தனது நகைச்சுவை மூலம் கூறி பிரபலமானவர் மதுரம்.
2. மனோரமா
ஆச்சி மனோரமா என்று அழைக்கப்படும் மனோரமா அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேலாக நூற்றுக்கணக்கான வேடங்களை ஏற்று திறம்பட நடித்து புகழ்பெற்றவர். தனி முக பாவனை பேச்சு வழக்கு உடல் மொழி என மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் மனோரமா.
3. குமாரி சச்சு
சரஸ்வதி சுந்தரேசன் ஐயர் தொழில் ரீதியாக குமாரி சச்சு என்று அழைக்கப்படுபவர். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி கிட்டதட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த புகழ் பெற்றவர். குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்து பெயர் பெற்றவர் நடிகை குமாரி சச்சு. வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களும் நடித்து பிரபலமானவர் குமாரி சச்சு.
4. சரண்யா பொன்வன்னன்
தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் சரண்யா. ஆனால் இவர் நாயகியாக நடித்து பிரபலமானதை விட அம்மாவாக நடித்ததன் மூலமாக தான் பேரும் புகழும் பெற்றார். தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்திருப்பார் சரண்யா. அம்மா வேடத்திலும் நகைச்சுவை கலந்த பாத்திரத்தில் இவர் நடித்ததால் மிகவும் பிரபலமானவர். அதனால் இவரையும் ஒரு நகைச்சுவை நடிகை என்றே கூறலாம்.
5. கோவை சரளா
மனோரமாக்கு பிறகு காமெடியில் தமிழ் சினிமாவில் கலக்கி இருப்பவர் கோவை சரளா. இவரை சின்ன மனோரமா என்று கூட மக்கள் அழைத்தனர். வடிவேலு உடன் இவர் இணைந்து செய்த காமெடிகள் இன்றளவும் பிரபலமாக இருக்கிறது. அப்படி காலத்தால் அழியாத நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் கோவை சரளா.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…