தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களாக கொண்டாடப்படும் சிலர் நிஜ வாழ்க்கையில் என்னவோ பல சந்தோசங்களை இழந்து தான் இருக்கின்றன. அப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக கொண்டாடப்பட்டு காதல் தோல்வியால் திருமண வயதை கடந்தும் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நக்மா:
பாலிவுட் திரைப்படம் மூலமாக திரையுலகில் தன்னுடைய கெரியறை தொடங்கியிருந்தாலும் அதன் பிறகு தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் நடிக்க தொடங்கியவர் தான் நடிகை நக்மா. அந்த வகையில் 1994 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நக்மா அறிமுகமான திரைப்படம் தான் காதலன். தன்னுடைய முதல் தமிழ் படத்திற்காகவே சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதை பெற்றார்.
இதனை தொடர்ந்து ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன், பிஸ்தா உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்த நக்மாவுக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைய குணச்சித்திர வேதங்களில் நடித்து வந்தார். இறுதியாக சிட்டிசன் திரைப்படத்தில் நடித்திருந்த இவர் தமிழக அரசியலிலும் பழக்கினார். பிரபல கிரிக்கெட் வீரர் கங்குலியை காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் அதன் பிறகு நடிகர் சரத்குமார் உடன் தொடர்பில் இருந்ததாகவும் கிசு கிசு வந்தது. அடுத்தடுத்து தன்னுடைய வாழ்க்கையில் காதல் தோல்வி ஏற்பட்டதால் திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்து தற்போது வரை முரட்டு சிங்கிளாக இருந்து வருகின்றார்.
கனகா:
கரகாட்டக்காரன் திரைப்படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கனகா. முன்னாடி நடிகர்களான ரஜினி மற்றும் பிரபு உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தனது தாயார் தேவிகாவின் இறப்புக்கு பிறகு மன உளைச்சலுக்கு ஆளான கனகா ஒருவரை காதலித்து வந்த நிலையில் அந்த காதல் தோல்வி அடைந்ததால் இனி யாரையும் வாழ்க்கையில் நம்ப கூடாது என்று முடிவெடுத்தார். பிறகு தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் 50 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகின்றார்.
சித்தாரா:
புது புது அர்த்தங்கள் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கேரளாவை சேர்ந்த நடிகை சித்தாரா உன்னை சொல்லி குத்தம் இல்லை, புதுவசந்தம், புரியாத புதிர், ஒரு வீடு ஒரு வாசல் போன்ற பல திரைப்படங்களில் நாயகியாக நடித்தார். பிறகு ஹீரோயின் வாய்ப்பு குறைய தொடங்கிய நிலையில் படையப்பா, மனுநீதி, முகவரி மற்றும் திருநெல்வேலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அதே சமயம் பல சீரியல்களிலும் நடித்துள்ள இவர் தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் மலையாளம் என பழமொழிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். காதல் தோல்வி காரணமாகவே இவரும் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
தபு:
பாலிவுட் திரையுலக சேர்ந்த நடிகை தபு தன்னுடைய 53 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றார். அஜய் தேவன் போன்ற சில பாலிவுட் பிரபலங்களுடன் டேட்டிங் செய்து வந்த நிலையில் இவரின் காதல் திருமணம் வரை செல்லவில்லை. எனவே தனக்கு திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்து தற்போது வரை முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து வருகின்றார். இவர் தமிழில் காதல் தேசம், இருவர் மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்
கௌசல்யா:
கோலிவுட் திரை உலகில் காலமெல்லாம் காதல் வாழ்க திரைப்படம் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகை கௌசல்யா. இந்த படத்தை தொடர்ந்து நேருக்கு நேர், ஜாலி, பிரியமுடன், சொல்லாமலே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுசல்யா விஜய் மற்றும் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மிக குறுகிய காலத்தில் பிரபலமானார். என்றும் அக்கா மற்றும் அண்ணி என்ற குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு 44 வயதாகும் இடையில் காதல் தோல்வி காரணமாக இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றார்.
நடிகை திரிஷா:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொண்டாடப்படும் திரிஷா தற்போது 40 வயதை எட்டிவிட்டார். பிரபல தெலுங்கு நடிகர் ராணாவுடன் இவர் டேட்டிங் செய்து வந்த நிலையில் சிலர் சூழ்ச்சி காரணமாக இவருடைய காதல் தோல்வியில் முடிந்தது. பிறகு வருண்மணியன் என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நிச்சயதார்த்தமே நடந்த நிலையில் திடீர் கருத்து வேறுபாடு காரணமாக திருமண வாழ்க்கை போல் செல்ல முடியவில்லை. திருமணம் என்ற வார்த்தையை எடுத்தாலே பயப்படும் திரிஷா திருமணம் செய்து கொள்வதற்கு பயமே விவாகரத்து தான் என சில வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பேட்டியில் கூறி இருந்தார். தன் வாழ்க்கையில் சந்தித்த காதல் தோல்வியால் இன்று வரை திருமணம் வேண்டாம் என்று சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.
அனுஷ்கா:
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக கொண்டாடப்படும் அனுஷ்கா தமிழில் இரண்டு படம் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து சிங்கம், அலெக்ஸ் பாண்டியன், வேட்டைக்காரன் மற்றும் லிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் இவரை கொண்டாடினர். இவர் தனது 40 வயதை கடந்த பிறகும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு ஜாதகத்தில் உள்ள பிரச்சனை என்பது ஒரு புறம் இருந்தாலும் பிரபாஸ் மீதான காதல் என்று திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது
கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, திமுக மற்றும் காங்கிரஸ்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை சீனாவுக்காக நிரந்தரமாகத் திறப்பதாக அறிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு மயில் மற்றும் ஒரு பாம்புக்கு இடையே நடக்கும் கடுமையானப் போராட்டம்…
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வீடுகளில் பிரிட்ஜ் பயன்பாடு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், பிரிட்ஜை சுவரோடு ஒட்டி…
உலகெங்கும் ஆட்குறைப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகள் நிலவி வரும் சூழலில், சீனாவைச் சேர்ந்த மீடியாஸ்டார்ம் (Mediastorm) நிறுவனம்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சாலையில் கோழிகள் ஏற்றிச் சென்ற வண்டி விபத்துக்குள்ளானதை அல்லது நின்றுகொண்டிருந்ததைச் சாதகமாக்கிக்…