Categories: சினிமா

1330 திருக்குறளை விட இது தான் பெஸ்ட்.. என்.எஸ் கிருஷ்ணன் உயர்வாக நினைத்த அந்த பாடல்.. கவிஞர் வாலி பகிர்ந்த சுவாரஸ்யம்..!

Spread the love

சினிமாவை பொறுத்தவரையில் ஒரு படம் வெற்றி பெறுவதற்கு இயக்குனருக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதோ அதே அளவுக்கு இசையமைப்பாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இசையமைப்பாளர்கள் தங்களுடைய பாடல்களுக்கு முழுக்க நம்பிக்கை வைத்திருப்பது பாடலாசிரியர்களை தான். அவர்களில் ஒரு சில பாடலாசிரியர்கள் எழுதும் பாடல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அப்படி ரசிகர்களை தனது பாடல்களால் கட்டி போட்டவர் தான் கவிஞர் வாலி.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் மற்றும் விஜய் என மூன்று தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதியுள்ள வாலி பலபேட்டைகளில் தன்னை பற்றியும் தான் கேள்விப்பட்ட விஷயங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டவர். அதன்படி தஞ்சை ராமையா தாஸ் பாடலை திருவள்ளுவர் எழுதிய 1330 குரலை விட உயர்வானது என்று என் எஸ் கிருஷ்ணன் பகிர்ந்த தகவலை கூறியுள்ளார். அதாவது தஞ்சை ராமையா தாஸ் பற்றி நான் கேள்விப்பட்ட ஒரு தகவலை உங்களுக்கு கூறுகிறேன். என் எஸ் கிருஷ்ணன் ஒரு பாடலைப் பற்றி சொல்லி அது 1330 திருக்குறளை விட மிகவும் உயர்ந்தது என்று சொன்னார்.

அது ஒரு சாதாரண பாடல் தான். ராமையா தாஸ் சிங்காரி படத்துக்காக எழுதிய “ஒரு சான் வயிரே இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா?” என்ற பாடல் தான் அது. அவர் அந்தப் பாடல் எழுதிய காலகட்டத்தில் இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டு இருந்ததால் அரிசி பஞ்சம் ஏற்பட்டு உணவு தட்டுப்பாடு நிலவியது. இதனை நினைவில் கொண்டு தான் அந்த பாடலை அவர் எழுதினார். இதுதான் எதார்த்தத்தை கூறிய பாடல் என்று என் எஸ் கிருஷ்ணன் புகழ்ந்து தள்ளினார். நம்முடைய முன்னோடிகள் நம்மை விட 100 சதவீதம் அறிவாளிகள் என்று வாலி பெருமையாக பேசினார்.

Nanthini

Recent Posts

திடீ ர் திருப்பம்… அதிமுகவில் மீண்டும் டி.டி.வி. தினகரன்… தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

அதிமுகவில் டி.டி.வி. தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகக் கோரிக்கை…

21 seconds ago

குஷியோ குஷி தமிழகம் முழுவதும் அடுத்த 3 மாதங்களில்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…

6 minutes ago

4 மாசமா யாருக்குமே தெரியல… பர்தாவுக்குள் ஒளிந்திருந்த பகீர் உண்மை… 50 சவரன் நகையை நைசாக சுருட்டிய ‘நவநாகரீக’ பெண்… சென்னையில் அடுத்தடுத்து நடந்த அதிரடி கைதுகள்…!

சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…

16 minutes ago