“CM-க்கு ஒரு நீதி.. சீமானுக்கு ஒரு நீதியா?”…. தமிழக காவல்துறையை வெளுத்து வாங்கிய உயர்நீதிமன்றம்….!

Spread the love

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து இணையதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியைச் சேர்ந்த தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் விசாரித்தது. அப்போது, “முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழகக் காவல்துறை, சீமான் குறித்து அவதூறு மற்றும் அசிங்கமாகப் பேசப்படும்போது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை?” என்று நீதிபதி விக்டோரியா கெளரி கடுமையான கேள்விகளை எழுப்பினார். மேலும், காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதைச் சகித்துக் கொள்ள முடியாது என்றும், சீமான் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு தலைவர் என்றும் கருத்து தெரிவித்த நீதிபதி, அரசியல் தலைவர்களைத் தரக்குறைவாகச் சித்தரிப்பதை வேடிக்கை பார்க்க முடியாது எனச் சாடினார்.

இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சீமான் தொடர்பாக இணையத்தில் பதிவிடப்பட்டுள்ள மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அவதூறு வீடியோக்களை இன்றைக்குள்ளேயே அகற்றி, அது குறித்து வழக்குப் பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட சைபர் கிரைம் ஆய்வாளருக்கு உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய யூடியூபர்களான பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகியோர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தர பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

2 மணத்தியாலங்கள் ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

2 மணத்தியாலங்கள் ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

2 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

2 மணத்தியாலங்கள் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago