திடீர் திருப்பம்… முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வழக்கில்… உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

Spread the love

சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தன. நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கு தொடர்பான புலன் விசாரணையைத் தொடரவும், சம்மன் அனுப்பி எ.வ.வேலுவை விசாரிக்கவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதி அனுமதி அளித்தார். வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்ற அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்று, விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

எ.வ.வேலு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக அவர் தரப்பு வழக்கறிஞர் வில்சன் வாதிட்டதை அடுத்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த லுக் அவுட் நோட்டீஸை நீதிபதி ரத்து செய்தார். இருப்பினும், அவர் வெளிநாடு செல்ல நேரிட்டால் அதற்காகக் கீழமை நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதேபோல, வழக்கு தொடர்பாக எ.வ.வேலு மீது கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவையும் ஆகஸ்ட் 14 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையில், இந்த வழக்கை முற்றிலும் ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு தாக்கல் செய்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘அறப்போர் இயக்கம்’ சார்பில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, இது குறித்தும் எ.வ.வேலு தரப்பு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Swetha

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

3 மணத்தியாலங்கள் ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

3 மணத்தியாலங்கள் ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

3 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

4 மணத்தியாலங்கள் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago