என்ன ஆட்டம் ஆடுனீங்க… தேசியக் கொடியுடன் ரொமான்ஸ்?… ஹர்திக் பாண்டியா மீது பாய்ந்த வழக்கு… காத்திருக்கும் பெரிய சிக்கல்….!

Spread the love

டி20 உலகக்கோப்பை 2026 வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது காதலியுடன் எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மைதானத்தில் நடந்த கொண்டாட்டத்தின் போது, ஹர்திக் பாண்டியா தனது காதலி மஹிகா சர்மாவுடன் நெருக்கமான முறையில் நடந்துகொண்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஜித் கான் என்பவர் ஹர்திக் பாண்டியா மீது சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஹர்திக் பாண்டியா தனது கழுத்தில் தேசியக் கொடியை அணிந்தபடி, காதலியுடன் தரையில் படுத்துக்கொண்டு ரொமான்ஸ் செய்ததும், கொடியுடன் நடனமாடியதும் தேசியக் கொடியை அவமதிக்கும் செயலாகக் கருதி இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோக் காட்சிகள், தேசியக் கொடியின் கண்ணியத்தைக் குறைப்பதாகப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மைதானத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோக்களில் ஹர்திக் பாண்டியாவின் நடவடிக்கைகள் தேசபக்திக்கு மாறாகவும், தேசிய சின்னங்களை அவமதிக்கும் வகையிலும் இருந்ததாகப் புகார் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வீரர்களின் உரிமை என்றாலும், தேசியக் கொடியைப் போன்ற புனிதமான சின்னங்களை கையாள்வதில் கூடுதல் பொறுப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்பதே அனைவரது கருத்தாக உள்ளது. இதற்கிடையே, காவல்துறையினர் இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

Nanthini

Recent Posts

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

17 minutes ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

22 minutes ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

24 minutes ago

BREAKING: பிளஸ் 2 ரிசல்ட் நாளை வெளியாகிறது… அரசு தேர்வு துறை இயக்கம் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு முடிவுக்கு வரும் வகையில், பிளஸ் 2 தேர்வு…

49 minutes ago

“அன்னைக்கே நான் சொன்னேன்.. இபிஎஸ் தான் கேட்கல”… இன்னைக்கு தோத்ததுக்கு காரணமே அதுதான்… பகீர் கிளப்பிய கே.சி பழனிசாமி…!

அதிமுகவின் தற்போதைய பின்னடைவு மற்றும் வீழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான செயல்பாடுகளே காரணம் என்று முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கடுமையாகச்…

50 minutes ago