ரஜினியை வில்லனாக நடிக்கக் கேட்ட டி ராஜேந்தர்… ஆனாலும் தில்லுதான் நம்ம தலைவருக்கு!

By vinoth

Updated on:

டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்தவர். அவரது அடுக்குமொழி வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. சிறந்த பேச்சுத்திறமை கொண்ட டி.ராஜேந்தர் மனதில் பட்டதை பொதுவெளியாக இருந்தாலும் வெளிப்படையாகப் பேசிவிடுவார். ஆதலால் சில நேரங்களில் அவர் பேசியது சர்ச்சையை உண்டு செய்துவிடும்.

ஒரு தலை ராகம் என்ற படம் மூலமாக அறிமுகம் ஆன டி ராஜேந்தர் அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.தொடக்கத்தில் திரைப்படங்களை இயக்கி, பாடல்கள் எழுதி, இசையமைத்து, ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கத்தை மேற்கொண்ட  அவர் உயிருள்ளவரை உஷா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ந்து தன் படங்களில் தானே கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.

   

ரஜினி, கமல் போன்றோருக்கான மாஸ் ஆடியன்ஸ்கள் இருப்பது போலவே டி ஆருக்கும் தனியான ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. குறிப்பாக அவருக்கு மிக அதிக எண்ணிக்கையில் பெண் ரசிகைகள் இருந்தார்கள். அவரின் அந்த காலத்து கதைகள் பல இப்போது சீரியல்களாக எடுக்கப்பட்டு ஹிட்டடித்து வருகின்றன.

இந்நிலையில் டி ராஜேந்தர் தன்னை ஒரு படத்தில் நடிக்கக் கேட்ட சம்பவம் பற்றி ரஜினிகாந்த் ஒரு மேடை நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் ‘என் நண்பர் டி ராஜேந்தர் ஒருமுறை என்னை அவர் படத்தில் நடிக்கக் கேட்டார். கதையைக் கேட்டபோதுதான் தெரிந்தது அது ஒரு வில்லன் வேடம் என்று. ராவணன் போன்ற ஒரு வில்லன் கதாபாத்திரம் அது. ஆனால் அந்த படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போனது” எனக் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் டி ராஜேந்தரின் அசாத்திய துணிச்சலைக் காட்டுகிறது. அப்போது தன்னுடைய புகழின் உச்சத்தில் இருந்த ரஜினிகாந்தை வில்லனாக நடிக்க அவர் கேட்டிருக்கும் சம்பவம் ரஜினி ரசிகர்கள் பலருக்கும் ஆச்சர்யத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கும்.