Zomato, zepto-வை ஒரந்தள்ளி புதிய செயலியை இறக்கிய Swiggy… ஒர்க் அவுட் ஆகுமா…?

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பாதிபேரின் வாழ்க்கை Swiggy Zomatoவை நம்பி தான் இருக்கிறது. ஏனென்றால் கொரோனா காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடக்கப்பட்டனர். அப்போது எல்லாமே போனில் ஆர்டர் செய்யும் பழக்கமும் அவர்களுக்கு வந்துவிட்டது. அந்த வியாபாரமும் நன்றாக பெருகியது. அதே செய்து பழகியதால் மக்கள் இப்போதும் வீட்டிலிருந்து ஆர்டர் செய்து கையில் வாங்குவதை தான் விரும்புகிறார்கள். அதன்படி வேலைக்கு செல்லும் ஆண் பெண் இருவரும் நேரமின்மையால் உணவுகளை Swiggy Zomatoவில் ஆர்டர் செய்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் வாங்கி சாப்பிடுவதையே விரும்புகிறார்கள். தற்போது அதையும் ஒரு படி தாண்டி போய் இந்த Zomato Zepto Swiggy போன்றவை பல ஆபர்களையும் மின்னல் வேக டெலிவரிகளையும் வழங்கி வருகிறது.

முதலில் உணவு மட்டும் டெலிவரி செய்து வந்த Swiggy Zomato போன்ற நிறுவனங்கள் தற்போது வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொரியர் சர்வீஸ் போன்ற பலவித சேவைகளை செய்து வருகிறது. இப்போது இந்த Swiggy Zomato Zepto ஆகியவற்றிற்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த மூன்று நிறுவனங்களும் விரைவான டெலிவரியை வழங்க போட்டி போட்டுக் கொண்டு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது Swiggy Snacc என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

முன்னதாக Swiggy போல்ட் என்ற புதிய அம்சத்துடன் 10 நிமிட உணவு டெலிவரியை வழங்கி வந்தது. தற்போது Snacc ஆப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த Snacc ஆப்பின் நோக்கமானது விரைவான உணவு டெலிவரிகளை வழங்கும் Swiggyயின் தற்போதைய போல்ட் சேவையை விட இது இன்னும் வேகமாக டெலிவரி அனுபவத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. பெங்களூரில் நடைமுறையில் உள்ள இந்த Snacc ஆப்பானது துரித உணவுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

Zepto ஏற்கனவே 10 முதல் 15 நிமிடத்திற்குள் நீங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் உங்கள் கையில் வந்து சேர்ந்து விடும் என்று விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது. Zomato அதன் ஆப்பில் புதிய 15 நிமிட உணவு டெலிவரி அம்சத்தை எந்தவித அறிவிப்பும் இன்றே அமைதியாக அறிமுகப்படுத்தி உள்ளது சத்தம் இல்லாமல் அதன் போட்டியை தீவிரப்படுத்தி வருகிறது. ஆப்பில் இந்த 15 நிமிட டெலிவரி ஆப்ஷனை நாம் தேர்ந்தெடுக்கும் போது அதன் பார்ட்னர் ரெஸ்டாரண்டுகளில் இருந்து விரைவாக தயாரிக்க கூடிய மற்றும் உடனடியாக சாப்பிட தயாராக இருக்கும் உணவுகளை வழங்கி வருகிறது.

அதே வரிசையில் தற்போது Swiggy Snacc என்ற ஆப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய செயலியானது ஏற்கனவே செயலில் இருக்கும் Blinkit Bistro மற்றும் Zepto அவற்றின் ஒத்த அம்சத்தை கொண்டிருக்கிறது. Snacc ஆப்பும் 15 நிமிடத்திற்குள் டெலிவரி என்ற ஒரு வாசகத்துடனே விளம்பரம் செய்யப்படுகிறது. இத்தனையும் வியாபார நோக்கில் ஒன்றுக்கொன்று போட்டி செய்துகொண்டு செயல்படுத்தி வருகிறார்கள். இதில் எது வொர்க் அவுட் ஆகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

admin

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

4 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

4 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

5 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

5 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

5 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

5 மணத்தியாலங்கள் ago