நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதனையடுத்து வெற்றிமாறனுடன் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதன் பிறகு சூரரை போற்று கூட்டணியுடன் உருவாகும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் என்ற கதாபாத்திரம் ரசிகர்களை தெறிக்கவிட்டது. எனவே ரோலக்ஸ் கதாபாத்திரத்தை முழு படமாக எடுக்க லோகேஷ் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி என்றாலும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் நடிக்க சூர்யா தற்போது கமிட் ஆகியுள்ளார். ஜெயலர் படம் கிட்டத்தட்ட 650 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்தது. அந்த வசூலை முறியடிக்கும் நோக்கத்தில் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரபல இயக்குனர் ஓம் பிரகாஷ் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். மகாபாரத கதையை தழுவி எடுக்க உள்ள இந்த படத்தில் சூர்யா கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ரவி வர்மா தான் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சூர்யா ஏற்கனவே கமிட்டான சுதா கொங்கரா மற்றும் வாடிவாசல் படங்களை முடித்த பிறகு தான் இந்த படத்தில் நடிக்க உள்ளார். வருகிற 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சூர்யா கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதை அறிந்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

