Categories: சினிமா

பாலிவுட்டில் கால் பதிக்கும் சூர்யா.. PAN இந்திய ஸ்டாராக புது அவதாரம் எடுக்கும் ROLEX..!!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர். ஆனால் அதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இதனால் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. நவம்பர் மாதம் கங்குவா படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இதனால் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் பிரபல நடிகரான ஷாருக்கான் தனது படங்களில் தென்னிந்திய பிரபலங்களோடு இணைந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பாலிவுட் சினிமாவில் அனைவரும் கொண்டாடிய திரைப்படம் தூம். இதுவரை அந்த படத்தின் மூன்று பாகங்கள் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தில் அபிஷேக் பச்சன், ஹிருத்திக் ரோஷன், அமீர்கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது தூம் படத்தின் நான்காவது பாகம் உருவாகி கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் சூர்யாவை வில்லனாக நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். மகாராஜா திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி வேறு எந்த படத்தில் வில்லனாக நடிக்க கூடாது என முடிவெடுத்ததாக தெரிகிறது.

சூர்யாவை பொருத்தவரை ஏற்கனவே அவர் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். இப்போது தூம் படத்தில் சூர்யா நடிக்க கமிட் ஆனால் பாலிவுட்டிலும் மிரட்டலான வில்லனாக என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

admin

Recent Posts

இது வளர்ச்சியா?… அரசுக்கு வெட்கமில்லையா?… மேடையில் 100% வளர்ச்சி… களத்தில் காலியான ஆக்சிஜன் சிலிண்டர்… அவலநிலை நேரடி ரிப்போர்ட்…!!

பல்லியா மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் வளர்ச்சி முழக்கங்களுக்கும், அடித்தட்டு மக்களின் அன்றாட அவலங்களுக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுகிறது.…

6 minutes ago

பெட்ரோல் போடுற சாக்குல பெரிய ஸ்கெட்ச்…! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க… ஊழியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… வைரலாகும் சிசிடிவி வீடியோ…!!

கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில், பெட்ரோல் போடுவது போல நடித்து ஊழியரின் கவனத்தைத் திசைதிருப்பி செல்போனைத்…

10 minutes ago

2018-ல் செய்த கொலை… மகனின் கொடூர பழிவாங்கல்… நடுரோட்டில் துடிதுடிக்க சுட்டுக்கொலை… தந்தையின் கடந்த கால பாவம்…!!

பழிவாங்கும் உணர்ச்சி ஒருபோதும் நிலையான நீதியைத் தருவதில்லை; மாறாக, அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வன்முறையையும் கண்ணீரையும் மட்டுமே கடத்துகிறது. கடந்த…

17 minutes ago

“கடையில் பழத்தை திருடிய குட்டி யானை…” பின்னங்காலால் அடித்து திருப்பி வைக்க சொன்ன தாய் யானை… நெஞ்சை நெகிழ வைக்கும் வைரல் வீடியோ…!!

சாலையோரக் கடையில் ஆசையுடன் பழத்தைத் திருடிச் சாப்பிட முயன்ற குட்டி யானையைத் தடுத்து நிறுத்தி, அந்தப் பழத்தை மீண்டும் கடையிலேயே…

20 minutes ago

நிம்மதியாக தூங்கிய குடும்பம்… மின்னல் வேகத்தில் வந்த பைக்… நடுங்க வைத்த துப்பாக்கி சத்தம்… CCTV-யில் சிக்கிய மர்ம நபர்கள்…!!

வடமேற்கு டெல்லியின் பிதம்பூரா பகுதியில் துபாயில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவரின் வீட்டை குறிவைத்து மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்…

24 minutes ago