#image_title
வளர்ந்து வரும் நடிகையான அபர்னதி ப்ரமோஷனுக்கு பல கண்டிஷன்களை போட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்து இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் படலமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஆர்யாவை திருமணம் செய்து கொள்வேன் என்று போட்டி போட்டார்கள். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்தான் அபர்னதி.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஆர்யாவை பற்றி சில சர்ச்சையான விஷயங்களை பேசி வந்தார். இதையடுத்து இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ஜெயில் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதையடுத்து விதார்த், விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இறுகபற்று என்ற திரைப்படத்தில் விதாரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்காக கவனம் செலுத்தி வரும் அபர்னதி செய்த ஒரு வேலையை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியிருக்கின்றார். சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம். அதை தக்க வைத்துக் கொள்வது என்பது மிக முக்கியமானது. ஆனால் இரண்டு மூன்று திரைப்படங்களில் நடித்த உடன் நடிகைகள் நான் பெரிய நடிகை என்று காட்டிக் கொள்கிறார்கள். இதனால் அவர்களின் சினிமா சீரியல் பாழாய் போகின்றது.
வெற்றி என்ற புதுமுகம் இயக்குனர் இயக்கிய திரைப்படம் நாற்கரப்போர். இந்த திரைப்படத்தில் நடிகர் அஸ்வின் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அபர்னதி நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுரேஷ் காமாட்சி ஹீரோயின் அபர்னதி பட ப்ரோமோஷனுக்கு வராததை பற்றி பேசியிருந்தார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “இந்த படத்தின் தயாரிப்பாளர் வேலாயுதம் என்னை பிரமோஷனுக்கு வரவேண்டும் என்று கூறினார். மேலும் என்னிடம் நடிகை அபர்னதி வர மறுத்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து நான் அபர்னதியை தொலைபேசியில் அழைத்து ப்ரமோஷனுக்கு வருவதைப் பற்றி பேசினேன். அப்போது அவர் பிரமோஷனுக்கு வரவேண்டும் என்றால் தனியாக 3 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்.
மேலும் பிரமோஷனுக்கு வந்தால் என் அருகில் யார் உட்கார வேண்டும் உட்காரக்கூடாது என்பதை பற்றி கண்டிஷன் போட்டார்? எனக்கு சமமான நடிகர்கள்தான் என்னுடன் மேடையில் அமர வேண்டும் என்றெல்லாம் கூறினார். இது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. உடனே நான் போனை கட் பண்ணி விட்டுட்டேன். இதையடுத்து மீண்டும் தன்னை அழைத்த அபர்னதி நீங்கள் யார் என்று தெரியாமல் பேசி விட்டேன் மன்னித்து விடுங்கள் பிரமோஷனுக்கு வருகிறேன் என்று கூறினார்.
ஆனால் இன்று பிரமோஷன் விழாவில் அவர் வரவில்லை. போன் செய்தபோது அவுட் ஆஃப் ஸ்டேஷனில் இருப்பதாக கூறினார். அவர் தயவுசெய்து இந்த பக்கம் வரவே வேண்டாம். அப்படியே அவுட் ஆப் ஸ்டேஷனிலேயே இருக்கட்டும். அதுதான் சினிமாவிற்கு நல்லது. மேலும் இந்த இடத்தில் இதை ஏன் கூறுகிறேன் என்றால் அபர்னதியை பற்றி மற்ற தயாரிப்பாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்” என அந்த மேடையில் அபர்னதியை கிழித்து தொங்க விட்டுவிட்டார்.
'வீ தி லீடர்ஸ்' அமைப்பைத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் சற்று மென்மையான மற்றும் அமைதியான போக்கையே…
மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்…
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள யோட்சுயா ரயில் நிலையம், தண்டவாளப் பகுதிகளில் வளர்ந்துள்ள தேவையற்ற புற்களை இயற்கையான முறையில்…
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கட்டடத்தின் 3-வது மாடி பால்கனியில் இருந்து குட்கா மென்று கீழே துப்பிய 65 வயது…
பிரான்சில் நடைபெற்ற போராட்டத்தில் மார்வெல் மற்றும் அனிமேஷன் கதாபாத்திரங்களின் உடைகளை அணிந்து கலந்துகொண்டவர்களின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும்…
படுகாட்டில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தில், மேற்குவங்க மாநிலம் குர்சியோங் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த யானைக் குட்டி ஒன்று, வனத்துறையினரின்…