சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘படையப்பா’ திரைப்படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1999 இல் வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம் ‘படையப்பா’. இந்த படத்தை கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார். இந்த படத்தின் மொத்த வசூல் அனைவரையும் பிரமிக்க வைத்தது. படையப்பா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியது.
இத்திரைப்படத்தில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 210 பிரிண்டுகளுடன் வெளியானது. 700000 ஆடியோ கேசட்டுகளுடன் வெளியான முதல் திரைப்படம் இதுதான்.
இத்திரைப்படத்தில் நடிகர் ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருப்பார். இப்படத்திற்கு ஐந்து மாநில விருதுகள் உட்பட எண்ணற்ற விருதுகள் கிடைத்தன.
படையப்பா திரைப்படம் இப்பொழுது ஒளிபரப்பானாலும் சலிக்காமல் பார்க்கலாம். 5 கோடி பட்ஜெட்டில் இத்திரைப்படத்தை இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் தயார் செய்திருந்தார்.
எத்தனை திரைப்படங்கள் திரையுலகில் வந்தாலும் மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தை பிடித்த திரைப்படம் தான் படையப்பா. இப்படம் திரையிடப்பட்ட ஆண்டு மொத்தம் ரூபாய் 55 முதல் 60 கோடி வரை வசூல் செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் வாயைப் பிளந்து வருகின்றனர்.
சென்னை அயனாவரத்தில் தனியாக வசித்து வந்த 75 வயது மூதாட்டி ஒருவரிடம், அதே வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்ணும் அவரது…
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கை குழுவின் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் நாளை வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.…
தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு எதிராகத் தமிழக அரசு கடும் நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது. ஜனவரி 5-ஆம்…
கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் தேர்தல்களை…
கடலூர் மாவட்டம் வேப்பூரில் நாளை நடைபெறவுள்ள தேமுதிகவின் 'மக்கள் உரிமை மீட்பு மாநாட்டிற்கான' பிரம்மாண்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.…
இத்தாலியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் சேர்ந்த ஜோதி என்ற இந்தியப் பெண், அங்குள்ள பணிச் சூழல் குறித்துப் பகிர்ந்துள்ள…