Categories: சினிமா

சூப்பர் ஸ்டார்னா சும்மாவா.. இன்று 74-வது பிறந்த நாளை கொண்டாடும் ரஜினியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

Spread the love

இந்திய சினிமா எத்தனையோ ஹீரோக்களை கண்டறிகிறது. சினிமா என்றாலே முதலில் ஹீரோ வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. அதனை முதலில் உடைத்து சினிமாவில் சாதித்து காட்டியவர் தான் ரஜினி. கருப்பான உருவம், சின்ன கண்கள் மற்றும் ஒல்லியான தேகம் என சினிமாவுக்குள் வந்த ரஜினி ஹீரோவான பின்னர் தான் கருப்பாக இருந்தாலும் ஹீரோ ஆகலாம் என்ற நம்பிக்கை பலருக்கும் மனதில் வந்தது. முதலில் கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக சினிமாவில் நுழைந்த ரஜினி வில்லன் என்று பயணித்துக் கொண்டிருந்த கட்டத்தில் ஹீரோவாக உருவெடுத்தார். ஒழுங்காக தமிழ் பேச தெரியாமல் நடனம் ஆட தெரியாமல் இவரெல்லாம் எப்படி ஹீரோவாக நிலைப்பார் என்று பல விமர்சனங்கள் எழுந்தபோது தன்னிடம் எதையெல்லாம் குறையாக கூறினார்களோ அதில் எல்லாம் ஜெயித்து காட்டினார்.

இதனால் மெல்ல மெல்ல ரசிகர்கள் கூட்டமும் அதிகரிக்க தொடங்கியது. ஸ்டைல் என்ற பெயருக்கு ரஜினி என்று அர்த்தம் என சொல்லும் அளவுக்கு தன்னுடைய ஸ்டைலால் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலியை ரஜினி பிடித்த நிலையில் அவர் இந்த இடத்திற்கு வந்ததற்கு முதல் காரணம் திறமை என்றால் மற்றொரு காரணம் அவருடைய எளிமை தான். எவ்வளவு பெரிய உச்சத்திற்கு சென்றாலும் தன்னுடைய ஆரம்ப காலத்தில் பழகியவர்களை தற்போது மறக்காமல் உள்ளார்.

தற்போது 74 வயதாகும் ரஜினி சினிமாவில் இளம் ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் விதமாக தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இறுதியாக வேட்டையின் திரைப்படத்தின் அவர் நடித்திருந்த நிலையில் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் இவர் நடிக்க உள்ளார். இப்படி சினிமாவில் தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் ரஜினி இன்று தனது 74 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில் ரஜினியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த 2002 ஆம் ஆண்டில் போயஸ் கார்டனில் ரஜினி பங்களா கட்டி இருந்தார். அதன் இன்றைய மதிப்பு 50 கோடி. அதுமட்டுமல்லாமல் ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட வெளிநாட்டு கார்களும் அவரிடம் உள்ள நிலையில் அதன் மதிப்பையே சுமார் 100 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது ஒரு படத்திற்கு 150 கோடி வரை சம்பளம் பெற்று வரும் ரஜினியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 600 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

6 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

6 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

7 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

7 மணத்தியாலங்கள் ago