Categories: சினிமா

திரைத்துறையில் அடுத்த விவாகரத்து.. 17 வருட திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்த பிரபல இயக்குனர்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் எழுத்தாளராக, கவிஞராக இலக்கிய உலகில் அறியப்படும் முக்கியமான நபராகவும் திகழ்கிறார். இவருடைய எழுத்தில் வெளியான கவிதை தொகுப்பில் இவருடைய சினிமாவைப் போல் உலகத்தை அவரது பார்வையில் எழுதியுள்ளார். குறிப்பாக காற்றால் நடந்தேன் என்ற கவிதை தொகுப்பு இவருடைய பால்ய காலங்களை பற்றி மிகவும் சுவாரசியமாக எடுத்துரைத்திருந்தது. இவை வாசகர்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றது. சீனு ராமசாமியை பொருத்தவரை தமிழ் சினிமாவில் பாராட்டப்படும் இயக்குனர்களில் ஒருவர். தென் தமிழ்நாட்டை குறிப்பாக ராமநாடு பகுதியை தன்னுடைய சினிமா மூலமாக அந்த மண்ணின் மக்களையும் மண்ணையும் அரங்கேற்றியவர்.

இவருடைய பெரும்பாலான படங்கள் அந்த பகுதியை சுற்றியதாகத்தான் அமையும். இவருடைய இயக்கத்தில் அறிமுகமான விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய அளவிலும் முன்னணி நடிகராக உள்ளார். அதனைப் போலவே இவருடைய இயக்கத்தில் தான் முதல் முறையாக இளையராஜாவும் விமர்சங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைத்திருந்தனர். இப்படி தமிழ் சினிமாவில் அனைவரும் பாராட்டப்படும் நபராக உள்ள சீனு ராமசாமி தற்போது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது சீனு ராமசாமி தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அன்பானவர்களுக்கு வணக்கம். நானும் என்னுடைய மனைவி தர்ஷனாவும் எங்களுடைய 17 வருட கால திருமண வாழ்வில் இருந்து விடை பெறுகின்றோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவரவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்தப் பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் என்னுடைய செயல்பாடுகள் அனைவரையும் எந்த விதத்திலும் சேராது, பொறுப்பேற்காது என்பதை நான் அறிவேன்.

இந்த பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர் நீதிமன்றத்தை நாங்கள் நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கும் மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம் தரும், அன்புடன் ராமசாமி என்று இன்று அதிகாலை 4 மணி அளவில் அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீப காலமாகவே திரைத்துறையில் விவாகரத்து என்பது அதிகரித்து வரும் நிலையில் இறுதியாக ஏ.ஆர் ரகுமான் விவாகரத்தை அறிவித்த நிலையில் தற்போது சீனு ராமசாமியும் விவாகரத்து அறிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது.

Nanthini

Recent Posts

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

1 minute ago

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

8 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

11 minutes ago

மக்கள் பணத்தை தொட்ட யாரையும் சும்மா விட மாட்டோம்… ஊழல் ஒன்னு ஒன்னா வெளியே வரும்… ஏன்பா பயந்து நடுங்குறீங்க..? சட்டசபையை அதிர வைத்த முதல்வர் விஜய்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

15 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

18 minutes ago

சட்டமன்றத்தில் பரபரப்பு…. “டாஸ்மாக்கில் பார்ட்டி ஃபண்ட்” CM விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை… திமுகவினர் கடும் அமளி…!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…

22 minutes ago