இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி இயக்கியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி, படத்தின் வெற்றி வேண்டி சுந்தர் சி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகமும் உடனிருந்து வழிபாட்டில் பங்கேற்றார்.
தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சுந்தர் சி, திருப்பதி வந்ததற்கான காரணங்களைப் பகிர்ந்துகொண்டார். “தனது அண்ணன் ஏ.சி. சண்முகத்தின் பேரக்குழந்தைகளின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் நல்லாயீனுக்காகவும், வரும் 6ஆம் தேதி வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கவும் வந்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து ‘அரண்மனை 5’ மற்றும் அடுத்தடுத்த படங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “முதலில் கமிட் ஆகியுள்ள படங்களை முடிப்பதில்தான் கவனம் செலுத்தி வருகிறோம். தீபாவளிக்கு ‘மூக்குத்தி அம்மன் 2’ வெளியாகும் நிலையில், அடுத்து பொங்கலுக்கு ‘குஷன்’ திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. மூக்குத்தி அம்மன் படத்தையும் அரண்மனை போல தொடர்ந்து பாகங்களாக எடுப்பதா என்பதை ஏழுமலையான்தான் தீர்மானிக்க வேண்டும்” என்று சிரித்தபடி கூறினார்.
மேலும், சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த ‘ஜெயிலர் 2’ திரைப்படம் குறித்துப் பேசிய அவர், ரஜினி இன்னமும் சூப்பர் ஸ்டார் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார் என்றும், தமிழகத்தில் அதிக வசூல் ஈட்டிய படமாக ‘ஜெயிலர் 2’ அமைந்திருப்பது பெருமைக்குரிய விஷயம் என்றும் பாராட்டினார். அத்துடன் ரஜினிகாந்தை வைத்து மீண்டும் படம் இயக்குவது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும் என்றும் சுந்தர் சி குறிப்பிட்டார்.
கடந்த சட்டசபை தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் என்டிஏ கூட்டணியில் போட்டியிட்ட சுந்தர் சியிடம், இறுதியில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கைகளைக் கூப்பி வணங்கியபடி, “தமிழ்நாடு நன்றாக இருக்கிறது, எல்லாமே நன்றாக இருக்கிறது” என்று சுருக்கமாகப் பதிலளித்துவிட்டு, அரசியல் சார்ந்த பிற கேள்விகளைத் தவிர்த்து அங்கிருந்து நகர்ந்தார். அவரது இந்த சுவாரஸ்யமான செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…