சன் டிவி அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாவதற்கு முக்கிய காரணம் என்றால் அந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான். மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு சீரியல்களும் ஒளிபரப்பாகி வரும் நிலையில் சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் தொடர்ந்து சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகின்றன. இருந்தாலும் டிஆர்பி யில் சன் டிவி சீரியல்களை எந்த சீரியல்களாலும் நெருங்க முடியவில்லை. வாரம் வாரம் டிஆர்பி ரேஸில் சன் டிவி சீரியல்கள் தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட மூன்று முடிச்சு மற்றும் சிங்க பெண்ணே உள்ளிட்ட சீரியல்கள் முதல் இடத்தை ஆக்கிரமித்து வரும் நிலையில் தற்போது அண்மையில் தொடங்கப்பட்ட புதிய சீரியல் ஒன்றை முடிவுக்கு கொண்டுவர சன் டிவி திட்டமிட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட ரஞ்சனி என்ற சீரியலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி அண்மையில் படமாக்கப்பட்ட நிலையில் ஓரிரு வாரங்களில் ரஞ்சனி சீரியல் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
நட்பை மையமாகக் கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்த நிலையில் விக்ரமனின் புது வசந்தம் பட பாணியில் இந்த தொடர் ரசிகர்களை கவர்ந்து வந்தது. மெல்ல மெல்ல பிக்கப் ஆகி வந்த இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வரவுள்ளது. ரஞ்சனி சீரியல் தொடங்கப்பட்ட நான்கு மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சி கொள்ளாக்கியுள்ளது. இந்த தொடரை விட பல மொக்கையான சீரியல்கள் எல்லாம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கையில் இந்த சீரியலை ஏன் நிறுத்துகிறீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…
உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் இதயத் துடிப்பாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை, தற்போது அமெரிக்க - ஈரான் இடையிலான போர்…
பிரிட்டனின் வால்சால் பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள்ளேயே புகுந்து நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் தற்போது பர்மிங்காம்…
மும்பையில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாக பாஜகவினர் நடத்திய பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் கண்டு ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர்,…
தமிழக அரசியலில் நடிகர் விஜயன் 'தமிழக வெற்றிக் கழகம்' ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும், அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…