Categories: சினிமா

நான்கே நாட்களில் வசூலில் மாஸ் காட்டிய விக்ரமின் வீர தீர சூரன்.. மொத்த கலெக்ஷன் இவ்வளவா..?

Spread the love

விக்ரம் நடிப்பில் உருவான வீரசோழன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. அருண்குமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. அதன் பிறகு இந்த திரைப்படம் கடந்த மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பட குழுவினர் தீவிர ப்ரோமோஷனில் ஈடுபட்டிருந்தனர். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்த நிலையில் படம் மார்ச் 27ஆம் தேதி மாலை தான் வெளியானது. வீர தீர சூரன் திரைப்படம் ரிலீஸ் ஆவதில் சில சிக்கல்கள் இருந்ததால் சொன்னபடி இந்த திரைப்படம் அன்று காலை வெளியாகவில்லை.

பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு சிக்கல்களை சமாளித்து இந்த திரைப்படத்தை மாலை முதல் திரையரங்குகளில் வெளியிட்டனர். என்னதான் இந்த திரைப்படம் முதல் நாள் மாலை மற்றும் இரவு காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டாலும் வசூல் நன்றாகவே அமைந்திருந்தது. முதல் நாளில் வீர தீர சூரன் திரைப்படம் மூன்று கோடி வசூலித்ததாக தகவல் வெளியான நிலையில் காலை முதலே படம் திரையிடப்பட்டு இருந்ததால் வசூல் மேலும் அதிகரித்திருக்கும் எனக் கூறப்படுகிறது.  இருந்தாலும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் போக போக பாக்ஸ் ஆபிஸில் வசூல் பேட்டை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வீர தீர சூரன் வசூல் புதிய உச்சத்தை தொட்டது. குறிப்பாக தமிழகத்தில் மூன்று நாட்களில் 10 கோடி ரூபாய் வசூலித்திருந்த இந்த திரைப்படம் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ஐந்து கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மட்டுமே இந்த திரைப்படம் 16 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

ரஜினியின் லால் சலாம் திரைப்பட லைப் டைம் வசூல் சாதனையை விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் முறியடித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாகவே லால்சலாம் 11 கோடி வசூலித்திருந்த நிலையில் அந்த சாதனையை நான்கே நாட்களில் விக்ரம் அசால்டாக அடித்து நொறுக்கி விட்டார். இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் இதுவரை உலக அளவில் மொத்தமாக 19 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

காதல் என்ற பெயரில் இப்படியொரு நரகமா?… துப்பட்டாவைப் பிடித்து இழுத்து மிரட்டல்… நடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… இணையத்தில் தீயாய் பரவும் காட்சி…!!!

இந்த வீடியோவில் நீங்கள் விவரிக்கும் காட்சிகள் உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொள்வது, அவர்…

20 minutes ago

நாளை வாக்குப்பதிவு: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா..? இதோ மொபைலில் சரிபார்க்கும் எளிய வழி..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்வது எப்படி மற்றும்…

35 minutes ago

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..! த்ரிஷா கொடுத்த அதிரடி குட் நியூஸ்.. குஷியில் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய படத்தில்…

45 minutes ago

விலை போனதா மனிதநேயம்..? துடிதுடிக்க அடித்துக் கொல்லப்பட்ட சமையல் கலைஞர் – வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்த நண்பர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…

49 minutes ago

நான் உன்னை விட்டு பிரிஞ்சி போனா என்ன பண்ணுவ..? தாய் கேட்ட அந்த கேள்வி… குழந்தை சொன்ன உருக்கமான பதில்… கியூட் வீடியோ வைரல் ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…

1 மணத்தியாலம் ago