விஜய் டிவி சீரியல் நடிகையை கரம்பிடிக்கும் ‘சிங்கப்பெண்ணே’ சீரியல் நடிகர்… யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

By Begam on மார்கழி 8, 2023

Spread the love

சன் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளனர். தற்பொழுது சன் தொலைக்காட்சியில் மக்களின் ஃபேவரட் சீரியல்களில் ஒன்றாக இருப்பது ‘சிங்க பெண்ணே’ சீரியல்.  இந்த சீரியல் டிஆர்பி யில் முதலிடத்தில் இருந்த கயல் சீரியலையே பின்னுக்கு தள்ளிவிட்டது.

   

இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் அமல் ஜித். தற்பொழுது இவருக்கு திருமணம் என்ற செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுவும் யாருடன் தெரியுமா? நடிகர் அமல் ஜித் விஜய் டிவி நடிகை ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம் அவர் வேறு யாருமில்லை.

   

 

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘கண்ணே கலைமானே’ சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை பவித்ரா அரவிந்த் என்பவர் தான். நடிகர் அமல் ஜித்தும், நடிகை பவித்ரா அரவிந்தும் காதலித்து வருகின்றனர்.

இவர்களது காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவித்து விட்டதால், இவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. தற்போது இந்த ஜோடியை ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.