ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக நிதிச் சிக்கலின்றிச் சேமிக்க விரும்புவார்கள். அத்தகைய பெற்றோர்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஒரு சிறந்த சேமிப்புத் திட்டம் தான் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா) ஆகும். 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை நிதி ரீதியாகப் பாதுகாக்கும் நம்பகமான திட்டங்களில் ஒன்றாகும்.
ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயது ஆகும் வரை எந்த நேரத்திலும் அவரது பெயரில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் இந்த கணக்கைத் தொடங்கலாம். இந்தக் கணக்கைத் திறக்க ரூ. 250 மட்டும் போதும். அதிகபட்சமாக ஒரு நிதியாண்டில் ரூ. 1.5 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். இந்தத் தொகையை மொத்தமாகவோ அல்லது தவணைகளாகவோ செலுத்தலாம்.
தற்போது இந்தத் திட்டம் ஆண்டுக்கு 8.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் வழக்கமான வங்கி வைப்புத் தொகையை விட அதிகமாகவும், அரசாங்கத்தால் ஒவ்வொரு காலாண்டிலும் தீர்மானிக்கப்படுவதாகவும் உள்ளது. இதில் முதலீடு செய்வதன் மூலம், வருமான வரி விலக்குப் பெறலாம்.
இந்தத் திட்டத்தில், கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்கு மட்டுமே வைப்புத்தொகை செலுத்தினால் போதுமானது. முதிர்வுக் காலமான 21 வயது வரை வைப்புத்தொகை செலுத்தாத காலத்திலும் வட்டி தொடர்ந்து கணக்கிடப்பட்டு ஒரு பெரிய தொகையாக மாறும். உதாரணமாக, ஆண்டுக்கு அதிகபட்ச தொகையான ரூ. 1.5 லட்சத்தை 15 ஆண்டுகள் தொடர்ந்து செலுத்தினால், முதிர்வு காலத்தில் சுமார் ரூ. 71.82 லட்சம் வரை பெற முடியும். இது மகளின் உயர் கல்வி அல்லது திருமணச் செலவுகளுக்குப் பேருதவியாக இருக்கும்.
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…