பிறந்த குழந்தைக்கு ஆதார் கட்டாயம்…! வீட்டிலிருந்தே விண்ணப்பிப்பது எப்படி…? ஈஸி டிப்ஸ் இதோ…!!

Spread the love

இந்திய மக்களுக்கான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றான ஆதார் அட்டை, பள்ளி சேர்க்கை முதல் அரசுத் திட்டங்கள் மற்றும் வங்கிச் சேவைகள் வரை பலவற்றுக்குப் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது.  இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையின் விவரங்களைப் புதுப்பிப்பது அவசியம்.

இதற்கு அருகில் உள்ள இ-சேவை மையத்தை அல்லது ஆன்லைன் முறையைப் பயன்படுத்தலாம். அதேபோல், மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை வழங்கி வருகிறது. இது ‘பால் ஆதார் அட்டை’ என்று அழைக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கான இந்த பால் ஆதார் அட்டையில், பெரியவர்களின் அட்டையில் இருப்பது போல பயோமெட்ரிக் (கைரேகை, கருவிழி) தரவு இருக்காது. ஆதார் எண்ணுடன், குழந்தையின் பெயர், புகைப்படம், பாலினம் மற்றும் பிறந்த தேதி போன்ற தகவல்கள் மட்டுமே சேர்க்கப்படும். பயோமெட்ரிக் தரவானது, குழந்தைக்கு 5 வயது ஆன பிறகு தனியாகப் புதுப்பித்துக் கொள்ளப்படும்.

பால் ஆதார் அட்டையைப் பெறுவதற்கான வழிமுறை மிகவும் எளிதானது. UIDAI-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று, விரும்பிய மொழியைத் தேர்ந்தெடுத்து, ‘My Aadhaar’ பகுதியில் ‘Book My Appointment’ என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதையடுத்து, உங்கள் மாநிலம் மற்றும் நகரத்தைத் தேர்ந்தெடுத்து, அருகில் உள்ள ஆதார் இ-சேவை மையத்தைப் பதிவு செய்ய வேண்டும். பின்னர், குழந்தையின் விவரங்கள் மற்றும் பெற்றோரின் ஆதார் விவரங்களைப் பதிவு செய்து, சேவை மையத்தில் நேரில் செல்ல வேண்டிய தேதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யலாம்.

ஆன்லைனில் முன்பதிவு செய்த பிறகு, குறித்த தேதியில் உங்கள் குழந்தையுடன் ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு குழந்தைக்குப் புகைப்படம் எடுக்கப்படும். பின்னர், அங்குக் கொடுக்கப்படும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, குழந்தையின் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். குழந்தை 5 வயதுக்குட்பட்டதாக இருப்பதால், பயோமெட்ரிக் பதிவுகள் இருக்காது அதற்குப் பதிலாக பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் (Consent) அளிக்கப்பட வேண்டும்.

இந்தச் செயல்முறை முடிந்தவுடன், உங்களுக்கு ஒரு பதிவு அடையாள எண் (Enrolment ID) வழங்கப்படும். இந்த ஐடியைப் பயன்படுத்தி, UIDAI இணையதளம் மூலமாக உங்கள் குழந்தையின் பால் ஆதார் கார்டின் நிலையைக் கண்காணிக்கலாம். பதிவு செய்த நாளிலிருந்து சுமார் 60 முதல் 90 நாட்களுக்குள் பால் ஆதார் கார்டு உங்கள் முகவரிக்குத் தபாலில் அனுப்பப்படும்.

பால் ஆதார் கார்டுக்குத் தேவையான ஆவணங்கள்:

  • குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்.

  • பெற்றோரில் ஒருவரின் ஆதார் அட்டை.

  • முகவரிச் சான்று (இது பெற்றோரின் ஆதார் அட்டை அல்லது உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழாக இருக்கலாம்).

குழந்தைகளை பள்ளிக்குச் சேர்க்கும்போதும், வெளிநாடுகளுக்குச் செல்லப் பாஸ்போர்ட் மற்றும் விசா விண்ணப்பிக்கும்போதும் இது ஒரு முக்கிய ஆவணமாக உதவுகிறது. மேலும், மருத்துவமனை மற்றும் காப்பீட்டுத் திட்டங்களுக்கும், குழந்தைகளுக்கான அரசு உதவித் திட்டங்களைப் பெறுவதற்கும் பால் ஆதார் அட்டை ஒரு முக்கிய ஆவணமாகத் திகழ்கிறது.

Devi Ramu

Recent Posts

எந்த பிரச்சனையும் இல்லை!… மனநல பாதிப்பா? வேறு ஏதேனும் காரணமா?… தாய், 18 மாத குழந்தையின் மர்ம மரணத்தில் திருப்பம்…!!

சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…

42 minutes ago

“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…

49 minutes ago

திகில் நிமிடங்கள்!… TV பார்த்து கொண்டிருந்த தம்பதி… நொடியில் வீட்டுக்குள் புகுந்த எமன்… கடைசியில் பெண் செய்த அந்த செயல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…

56 minutes ago

இனி நடக்காது!… NRI கணவர்களுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் கல்யாணம், வெளிநாட்டில் விவாகரத்தா?… முதல் மனைவியின் புகாரால் சிக்கிய நபர்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…

1 மணத்தியாலம் ago

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

1 மணத்தியாலம் ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

1 மணத்தியாலம் ago