#image_title
தமிழில் 2010 ல் வெளியான “துரோகி” என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. இவர் இயக்குனர் மணிரத்னம் அவர்களின் சுமார் 7 ஆண்டுகாலம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். முதன்முதலில் தெலுங்கு திரைப்படம் மூலம் தான் திரையுலகில் கால்பதித்தார்.
இதைத்தொடர்ந்து இவருடைய இயக்கத்தில் உருவான இறுதிச்சுற்று, குரு , புத்தம் புது காலை, சூரரை போற்று போன்ற பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தெலுங்கு, தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் திரைப்படங்களை இயக்கி வருகிறார். தற்பொழுது இவர் நடிகர் சூர்யாவை வைத்து ‘புறநானூறு’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார்.
விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இந்த படம் கால தாமதமாகும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில் வாரிசு நடிகரான துருவ் விக்ரம் கமிட்டாகியுள்ளார்.
இத்திரைப்படத்தை லைக்கா அல்லது மாவீரன் பட தயாரிப்பாளர் ஷாந்தி டாக்கீஸ் அருண் தயாரிக்க உள்ளதாகவும், மேலும் ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…