தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஜல்லி, எம்.சாண்ட் (M-Sand), பி.சாண்ட் (P-Sand) உள்ளிட்ட அத்தியாவசிய கட்டுமானப் பொருட்களின் விலை யூனிட்டுக்கு 500 ரூபாய் வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வின்படி, தற்போது சந்தையில் ஒரு யூனிட் ஜல்லி 3,800 ரூபாய்க்கும், எம்.சாண்ட் 4,500 ரூபாய்க்கும், பூச்சு வேலைகளுக்குப் பயன்படும் பி.சாண்ட் 5,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குவாரி மற்றும் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய காரணங்களால் இந்தத் தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
திடீரென ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டுமொத்த கட்டுமானத் தொழிலும் மந்தநிலையைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், குவாரிகள் அமைந்துள்ள தூரம் மற்றும் போக்குவரத்துச் செலவினங்களைப் பொறுத்து, மாவட்டத்திற்கு மாவட்டம் இந்தக் கட்டுமானப் பொருட்களின் விலையில் மேலும் சில மாற்றங்கள் இருக்கக்கூடும் என்றும் தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில், மனைவியின் மீது கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட கணவன் , அவரை நாற்காலியில் கட்டிவைத்து…
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…